ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்கள்? ரயில்வே சம்மேளன தலைவர் தந்த குட்நியூஸ்
சென்னை: அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலாக உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் கண்ணையா சென்னையில் விளக்கமாக கூறினார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ( UPS or Unified Pension Scheme) கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் என்ற 3 அம்சங்கள் உறுதி செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 25 ஆண்டு ஒருவர் பணியாற்றி ஓய்வு பெறும் பட்சத்தில் அவர் கடைசி 12 மாதம் வாங்கிய சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் என்பது ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அதேபோல் 10ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர் பணியின்போது இறந்தால் அவரது அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் வரை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு சென்னை திரும்பி அகில இந்திய ரயில்வே சம்ளேத்தின் தலைவர் என் கண்ணையா பத்திரிகையாளர்களை பேசினார். அப்போது அவர் மத்திய அரசு புதிதாக கொண்டு வரும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றியும், இதனால் கிடைக்கும் பலன் பற்றியும் விளக்கினார். இதுதொடர்பாக அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் என் கண்ணையா கூறியதாவது:
2004க்கு முன்பு மத்திய அரசில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வு பெறும்போது அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷனாகவும், டிஏவும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆனால் 2004க்கு பிறகு அதே வேலை செய்பவர்கள் ஓய்வுபெறும்போது ரயில்வேயில் தண்டவாள பராமரிப்பாளர் ஒருவருக்கு ரூ.1,760 தான் கிடைக்கும். அதன்பிறகு வேறு எந்த பணமும் கிடைக்காது. அதேபோல் லோகோ பைலட்டை எடுத்து கொண்டால் ரூ.3,760 தான் கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல போராட்டங்கள் பல லட்சம் பேரை வைத்து டெல்லி உள்பட ஒவ்வொரு இடங்களில் நடத்தினோம். இதன்மூலம் மத்திய அரசுக்கு பல அழுத்தங்களை கொடுத்தோம்.
ஜேசிஎம் என்று ஒன்று உள்ளது. இதில் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். அதில் கேபினட் செயலாளர் தலைவராக உள்ளார். நான் இணை செயலாளராக உள்ளேன். நாங்கள் பல அழுத்தங்களை கொடுத்த பிறகு இப்போது கேபினட் செயலாளராக உள்ள சோமநாதன் மீட்டிங் நடத்தினார்கள். இந்த மீட்டிங்கில் அழுத்தம் கொடுத்த காரணத்தினால் 2004க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு சாதகமான முடிவு வந்தது.
இப்போது பிரதமர் மீட்டிங்கிற்கு அழைத்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதில் 25 ஆண்டு பணி முடித்து ஓய்வு பெறும்போது கடைசி 12 மாதத்தில் அவர்கள் பெற்ற சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்போது தொழிலாளர் சம்பளத்தில் 10 சதவீதமும், மத்திய அரசு சார்பில் 14 சதவீதத்தை ஓய்வூதியத்துக்கு வழங்குகிறது. இதில் 4 சதவீதத்தை கட் செய்ய அனுமதி கோரினர். அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதற்கு காரணம் என்னவென்றால் பென்ஷன் வழங்க பணம் வேண்டும் என்று சொன்னார்கள். அதே சமயத்தில் மறைமுகமாக 8 சதவீதத்தை தரப்போகிறார்கள் என்பதால் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டோம். இன்னொரு கோரிக்கை வைத்தோம். சிலர் இப்போது உள்ள முறையை தொடர விரும்பினால் அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினோம். அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி பல கோரிக்கைகளை வைத்துள்ளோம். ரயில்வேயை பொறுத்தவரை வடஇந்தியர்கள் இங்கு வந்து பணி செய்கிறார்கள். இதனால் மொழிப்பிரச்சனை உள்ளது. பயணிகளுடன் சரியாக பேச முடியவில்லை. இதனால் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தபோது ஆர்ஆர்பி சார்பில் Linguistics ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் மொழியின் தரம் என்பது உயரும் என்பதை கூறியுள்ளோம்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது கேரண்டி பென்ஷன் திட்டமாகும். இதுவரை பென்ஷன் திட்டத்தில் அப்படியான நடைமுறை இல்லை. இதனால் தான் தண்டவாள பராமரிப்பாளர் ஓய்வூதியமாக ஆயிரத்து சில்லறை மட்டுமே வாங்கி இருந்தார். லோகோ பைலட்டுக்கு மூன்றாயிரத்தை விட சற்று அதிகம் தான் வாங்கினார். தற்போது இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதி திட்டத்தால் அவர்களுக்கு அதிகம் கிடைக்கும்'' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications