அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ஒரே நாளில் அதிர்ஷ்டம்! போக்குவரத்து துறையில் யார் யாருக்கு பணப்பலன்?
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.. அதுகுறித்த அறிவிப்புதான் அதிரடியாக வெளியாகியிருக்கிறது.. போக்குவரத்து ஊழியர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு ஊழியர் குடும்பங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குவதற்காக 2,446 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அதிரடி அரசாணையை வெளியிட்டுள்ளது..

அரசு போக்குவரத்து கழகம்
இந்த சிறப்பான நிதி ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்ற சுமார் 6,867 பணியாளர்கள் நேரடியாகப் பயன்பெற உள்ளனர்..
போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வாரிசுகளுக்கு வேலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர்ச்சியாகப் போராடி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..
ஓய்வூதியதாரர்கள் - பென்ஷன்
குறிப்பாக ஓய்வூதிய பலன்கள் விடுவிக்கப்படாதது ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த சூழலில், அரசு அவர்களின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து இந்த நிதியை விடுவித்துள்ளது..
ஏற்கனவே கடந்த 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்திற்கு 372 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2026 மார்ச் வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது..
போக்குவரத்து ஊழியர்களின் நலன் மட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கைக்கும் தமிழ்நாடு அரசு அண்மையில் டிஏபிஎஸ் (TAPS) என்ற புதிய திட்டத்தின் மூலம் தீர்வு கண்டது..
ஓய்வூதியம் - தமிழக அரசு சர்ப்ரைஸ்
அதேபோல் பெண்களை குஷிப்படுத்தும் விதமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி ஒவ்வொரு மகளிருக்கும் 5,000 ரூபாய் வழங்கப்பட்டு ஆச்சரியப்படுத்தப்பட்டது.. இதில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான 3,000 ரூபாயுடன் மே மாதத்திற்கான சிறப்புத் தொகையாக 2,000 ரூபாயும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது..
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் டீசல் மானியம், மகளிர் மற்றும் மாணவர் இலவசப் பயண மானியம் என போக்குவரத்துத் துறைக்கு 9,639 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.. அதன் தொடர்ச்சியாக தற்போது ஓய்வூதியதாரர்களுக்கான 2,446 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஜாக்பாட் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பின்படி, 2024 ஏப்ரல் மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு (VRS) பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதற்காக ஒதுக்கப்பட்ட 2,446 கோடி ரூபாய் நிதியானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற சுமார் 6,867 பணியாளர்களின் நிலுவையில் உள்ள பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி மற்றும் விடுப்பு ஒப்படைப்பு பலன்களை உடனடியாக வழங்கப் பயன்படுத்தப்படும் என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் குடும்பங்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்."
இங்கே இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டி உள்து.. அரசியல் ரீதியாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரசு எடுத்து வரும் இத்தகைய மக்கள் நல நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.. போக்குவரத்து ஊழியர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு ஊழியர் குடும்பங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications