கியாரே செட்டிங்கா? தவெக விஜய் ஆபீஸுக்கு நாங்க போகவேயில்லை! அவசர அவசரமாக அறிக்கைவிட்ட ஜாக்டோ-ஜியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் யாரும் விஜயை சந்திக்கவில்லை என அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்றார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய். அங்கு பரந்தூர் போராட்ட குழுவினர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை எனவும், ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு விஜய் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் யாரும் விஜயை சந்திக்கவில்லை என அந்த அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

JACTTO GEO Actor Vijay tvk

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கடந்த 13.06.2025 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித்தலைவருமான திரு.விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த 13.06.2025 அன்று நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான திரு.விஜய் அவர்களை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு.மாயவன் அவர்கள் சந்தித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பேசிய செய்தி என்பது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்துப்பேசியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு ஜாக்டோ-ஜியோ சார்பில் மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜாக்டொ-ஜியோ அமைப்பு தமிழ்நாட்டில் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடிவருகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரமைப்பாகும். அப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம், பறிக்கப்பட்ட உரிமைகள் மீளப் பெறப்பட்டது உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது.

இன்றைக்கும் தமிழ்நாடு அரசிடம் ஜாக்டோ-ஜியோ சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கைகள் விளைவாகவும் அரசிடமிருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு பணிவரன்முறைக்கு சேர்ப்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகள் பெற்றுள்ளோம். மேலும், பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை 30.09.2025 க்குள் பெறப்படும் என உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசிடமிருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, ஜாக்டோஜியோ சார்பாக மேற்கண்ட நடிகர் மற்றும் சங்கத்தலைவர் அவர்களை சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்ததமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, பத்திரிக்கைகளில் இச்செய்தியை திரும்பப்பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+