ஜெகன் மோகன் ரெட்டியை காப்பி அடிச்சால் போதுமா! ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் எழுந்து நின்றாலே பிரச்சனைதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் அலுவலகத்தை 5.5 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பது குறித்துப் பேச வேண்டியுள்ளது. மக்கள் பணத்தை இவ்வளவு விரயம் செய்யலாமா? காமராஜர் போன்ற தலைவர்களின் எளிமையை ஒப்பிடும்போது, பல தலைவர்கள் அதே அலுவலகத்தைப் பயன்படுத்திய நிலையில், இப்போதுள்ள இந்த ஆடம்பரம் தேவையா? என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Arasiyal Kalam சேனலில் பேசியிருக்கும் கோடீஸ்வரன், "சட்டசபையில் சில உறுப்பினர்கள் ஜெகன் மோகன் ரெட்டி போன்று உடை உடுத்தி, அவர் நடப்பது போலவே நடந்து வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இது ஒருவிதமான காப்பி அடிக்கும் செயலாகவே உள்ளது..பீச் கலர் பேண்ட் போடுவதற்கான மரியாதையே போய்விட்டது..

Jagan Mohan Reddy

ஆந்திர மாநில அரசியலை அப்படியே நம்முடைய தமிழக சட்டமன்றத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நமக்கு என்று தனித்துவமான மரபு இருக்கிறது.. அதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்க வேண்டும்.

ஜெகன் மோகன் ரெட்டி

எதையும் சொந்தமாக சிந்திக்காமல், ஆந்திர மாநில அரசியல்வாதிகளின் ஸ்டைலை அப்படியே பின்பற்றுவது தமிழகச் சட்டமன்றத்தின் தனித்தன்மையையும் அதன் கண்ணியத்தையும் குறைக்கிறது. பேரவைத் தலைவருக்கு மட்டும் வணக்கம் வைத்தால் போதும்.. உள்ளே நுழையும்போது சபாநாயகர் பார்க்கிறாரா இல்லையா என்பது முக்கியமில்லை. அந்த இருக்கையை மதித்து வணக்கம் வைத்துவிட்டு உள்ளே சென்று அமர்வதுதான் முறை.

சட்டமன்றத்திற்குள் நுழையும்போது ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, மிகவும் தரக்குறைவாகப் பேசிக்கொள்வது எனப் பல விஷயங்கள் நடக்கின்றன.. அப்படியிருக்கும்போது வணக்கம் வைப்பது மட்டும்தான் மிஸ்ஸிங்கா? அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்கு அமைச்சர்கள் பேசணுமா?

அருண்ராஜ் சூப்பர்

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த தரவுகளோ அல்லது முதிர்ச்சியோ இல்லாமல், தேவையில்லாமல் பழைய கதைகளைப் பேசி, மற்ற துறைகளை பற்றி பேசி சர்ச்சைகளை உருவாக்குகிறார்.. சரியாகவும், துறை சம்பந்தமாகவும் பேசுவது அருண்ராஜ் மட்டும்தான்.. தொடர்புடைய செய்தியை மட்டுமே பேசுவார்.. அதேபோல அமைச்சர் வெங்கட்ராமனும் தேவையில்லாததை பேசுவதில்லை..

ஆனால், நிர்மல்குமார் சம்பந்தமல்லாத, மற்ற துறைகளை பற்றியே பேசுவார்.. அதிலும் ஆதவ் அர்ஜுனா அவையில் எழுந்து நின்றாலே "இன்று என்ன மாதிரியான புதிய சிக்கலை உருவாக்கப் போகிறாரோ?" என்று சபாநாயகருக்கு பதற்றம் வந்துவிடுகிறது.

முதலமைச்சர் அலுவலகத்துக்கு 5.5 கோடி ரூபாய்

முதலமைச்சர் அலுவலகத்தை 5.5 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பது குறித்துப் பேச வேண்டியுள்ளது. மக்கள் பணத்தை இவ்வளவு விரயம் செய்யலாமா? காமராஜர் போன்ற தலைவர்களின் எளிமையை ஒப்பிடும்போது, பல தலைவர்கள் அதே அலுவலகத்தைப் பயன்படுத்திய நிலையில், இப்போதுள்ள இந்த ஆடம்பரம் தேவையா?

இந்த செலவு தொகையை ஏழைக் குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தாலே, அவர்கள் கடன் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள். முதலமைச்சர் அலுவலகம் ஏற்கனவே மிகவும் விசாலமாகத்தான் இருந்தது. பழைய அலுவலகத்திலேயே அனைத்து வசதிகளும் இருந்தது.. ஆனால், இவ்வளவு செலவில் மாற்றுவது தேவையற்ற ஆடம்பரம்,

அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தையோ அல்லது ஒரு கல்லூரியையோ கட்டுவதற்குக்கூட இவ்வளவு நிதி தேவைப்படாது. மக்கள் பணத்தைப் பொறுப்பற்ற முறையில் கையாளுவதாகும்.

தங்க முலாம் போட்டு இழைக்கறீங்களா

அரசு ஆவின் பால் கொள்முதல் செய்வதற்கோ அல்லது தூய்மைப் பணியாளர்களின் நலனுக்கோ பணம் இல்லை என்கிறார்கள்.. ஆனால், இந்த ஆடம்பரத்திற்கு மட்டும் எப்படிப் பணம் செலவழிக்கப்படுகிறது? இதுபோன்ற செயல்களை தட்டிக்கேட்பதற்கு பதிலாக, சமூக ஊடகங்களில் உள்ள சில இன்ப்ளூயன்சர்கள், இதற்கு ஆதரவாகவும், நியாயப்படுத்தியும் பதிவுகளை போடுவதையும், பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், உள்ளிட்ட பல முன்னாள் முதலமைச்சர்கள் இதே அலுவலகத்தைதான் பயன்படுத்தினார்கள்.. அவர்கள் யாருக்கும் அந்த இடத்தை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்ற வேண்டும் என்று தோணலையே.. ஒரு முதலமைச்சர் அலுவலகத்தை ரிப்பேர் செய்ய ஐந்தரை கோடியா? அந்த ஆபீஸை தங்க முலாம் போட்டு இழைக்க போறீங்களா? ஒரு கம்யூனிஸ்ட்காரரும் இதை பற்றி பேசவில்லை" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+