ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி புகார்! 70 வயதில் 23 வயது பெண்ணுடன் தொடர்பு!
சென்னை: வேறு ஒரு பெண்ணுடன் இருந்த தொடர்பை கண்டித்ததால் என்னையும் மகன்களையும் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மீது அவருடைய மனைவி அசோக்நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக இருந்து வருபவர் ஜாக்குவார் தங்கம் (70). இவர் சென்னை எம்ஜிஆர் நகர், அண்ணல் காந்தி தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (60), அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் ஜாக்குவார் தங்கம் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜாக்குவார் தங்கத்திற்கு 23 வயது இளம் பெண் ஒருவருடன் பழக்கம் இருக்கிறது. கடந்த 15 ஆம் தேதி இரவு அந்த பெண்ணை என் வீட்டிற்கு என் கணவர் அழைத்து வந்தார்.
இதை நான் தட்டிக் கேட்டேன். இதற்காக என்னையும் என் இரு மகன்களையும் அவர் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என்றும் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். இந்த புகாரை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை பெற்ற அனைத்து மகளிர் போலீஸார் சாந்தியிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் அவருடைய மகன்களிடமும் ஜாக்குவார் தங்கத்திடமும் விசாரணை நடத்த போகிறார்கள். பிறகு ஜாக்குவார் தங்கம் அழைத்து வந்ததாக சொல்லப்படும் பெண்ணிடமும் காவல் துறை விசாரணை நடத்தும்.
ஜாக்குவார் தங்கத்திற்கு 70 வயது இருக்கும். அப்படியெனில் அவருடைய மகன்களுக்கும் 20 வயதை தாண்டியிருக்கும். கிட்டத்தட்ட தனது மகன்களின் வயதுடைய ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதும் அதுகுறித்து மனைவி புகார் அளித்ததும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாக்குவார் தங்கம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனது 6ஆவது வயது முதல் சிலம்பம் பயில ஆரம்பித்தார். அன்று முதல் 27 வகையான ஸ்டண்ட் கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ஒருவர் மட்டுமே இத்தகைய சாதனையை புரிந்துள்ளார்.
இவர் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அது போல் ரஜினிகாந்தின் பிளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். அது போல் கமல்ஹாசனின் மகராசன் படத்திலும் ஸ்டன்ட் பணியை செய்துள்ளார். இதுவரை அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பீட்டர் ஹெய்ன், அனல் அரசு, கே. கணேஷ்குமார், ஸ்டண்ட் சில்வா, எஸ்.ஆர்.முருகன், நாக் அவுட் நந்தா ஆகியோர் ஜாக்குவார் தங்கத்தின் மாணவர்கள்தான்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications