ஜெய்பீம் சர்ச்சை: பாமகவினர் மிரட்டலால் நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவுக்கு பாமகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
காவல்துறையின் அராஜகத்தால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் சூர்யா இன்று 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையை வழங்கினார். சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு பார்வதி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன, ராஜாக்கண்ணு வழக்கில் ஆரம்பத்திலிருந்து போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன், உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

சூர்யாவுக்கு பாராட்டு
நடிகர் சூர்யா உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் சூர்யாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குனர் ஞானவேலும் இந்த திரைப்படத்தை திறம்பட இயக்கி உள்ளார். அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும் போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் ஜெய் பீம் படம் எடுத்து சென்றுள்ளது.

பார்வதி அம்மாளுக்கு உதவி
தற்போது வறுமையால் வாடும் பார்வதிக்கு பொருளாதார உதவி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுகொண்டோம். அதனை ஏற்று தற்போது 15 லட்ச ரூபாய் வைப்பு நிதி வழங்கி அதற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார்.

மொத்தம் ரூ15 லட்சம்
2 டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதியும் வழங்கி உள்ளார். வைப்பு நிதியில் வரும் வட்டி பணத்தை பார்வதி மாதம் மாதம் எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு அந்த தொகையை அவரது குடும்பத்தினர் பிரித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் பாராட்டியது மட்டுமல்லாமல் இருளர் சமூக மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கியுள்ளார். எனவே முதல்வரை சந்தித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்ட உள்ளோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
இச்சந்திப்பின் போது நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு வழங்குவோம் என அறிவித்திருந்தார். அத்துடன் மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா பழைய திரைப்படமாக வேல் படத்தையும் திரையிட விடாமல் தடுத்தனர். அத்துடன் நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை திரையரங்குகளில் ஓடவிடமாடோம் என்றும் பாமகவினரும் வன்னியர் சங்க நிர்வாகிகளும் எச்சரித்துள்ளனர். இத்தகைய மிரட்டல்களைத் தொடர்ந்தே நடிகர் சூர்யா வீட்டுக்கு தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications