தலையை காணோம், கையை காணோம்னு எங்களை கேட்க கூடாது.. 'சவுக்கை' மிரட்டிய காடுவெட்டி குரு மகன் கனலரசன்
சென்னை: ஒரு தலையை காணோம், கையை காணோம், காலை காணோம் என்று சொல்லிக்கொண்டு யாரும் எங்களை வந்து கேட்க கூடாது என்று காடுவெட்டி குரு மகன் கனலரசன், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் தவறாக சித்தரிக்க பட்டதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
பாமக கட்சி சார்பில் படக்குழுவினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வில்லன் கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டது இந்த சர்ச்சையில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

காடுவெட்டி குரு
வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெயர் காடுவெட்டி குரு. அவரது பெயரை குறிப்பிட்டு வில்லன் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டதும், அந்த கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் அக்னி கலசம் படம் இருப்பது போன்ற காலண்டர் காட்டப்படுவதும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த சர்ச்சை நீண்டு கொண்டே செல்லும் நிலையில்தான் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் பாமக நிறுவனர் ராமதாஸ் என்றும் வன்னியர்கள் புண்பட்டுள்ளதாக கூறும் அவர் வன்னிய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

சவுக்கு சங்கர் விமர்சனம்
மேலும், அந்தோணிசாமி பாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததில் தவறு இருக்க முடியாது, இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அந்தமான் சிறைக்கு சென்றவர் கிடையாது குரு, என்று சவுக்கு சங்கர் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பேசிய வீடியோ ஒன்று வெளியானது.

கண்ணில் சிக்க கூடாது
அதில் சவுக்கு சங்கர் பெரிய ஞானியா.. தயவுசெய்து என் கண்ணில் மாட்டிக்கொள்ள வேண்டாம் அவ்வளவுதான் நான் சொல்லுவேன். மைக் கிடைத்தால் யாரை விமர்சனம் செய்கிறோம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் உங்கள் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்த படி பேசக்கூடாது. நாளைக்கு இதன் விளைவுகள் உங்களுக்கு வந்தால் உங்களால் சமாளிக்க முடியுமா?

தலையை காணோம்னு கேட்காதீங்க
காடுவெட்டி குருவை நேசிக்கிற தீவிர விசுவாசிகள் லட்சக்கணக்கானபேர் வெளியில் இருக்கிறார்கள். நாளைக்கு ஒரு தலையை காணோம், காலை காணோம், கையை காணோம் என்று சொல்லிக்கொண்டு யாரும் தேடி வந்து எங்களை கேட்டு விடாதீர்கள். காவல்துறைக்கும் அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நாளைக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், எங்களை தேடி யாரும் வர வேண்டாம். ஏனென்றால் நீங்கள் பேசுகிற பேச்சு அப்படி இருக்கிறது. இவ்வாறு கனலரசன் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதனிடையே இந்த வீடியோ பதிவை கிண்டல் செய்துள்ளார் சவுக்கு சங்கர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications