நீங்க யார் சார் தடை பண்றதுக்கு? ஜெய் பீம் சர்ச்சைக்கு இடையே டிரெண்டாகும் வைரல் சினிமா காட்சி-வீடியோ
சென்னை: ஜெய் பீம் பட சர்ச்சைக்கு இடையே நடிகர் கருணாகரன் நடித்த படம் ஒன்றின் வீடியோ கிளிப் இணையத்தில் வைரலாக்கிக்கொண்டு இருக்கிறது.
Recommended Video
கடந்த இரண்டு வாரமாக தமிழ்நாட்டில் ஜெய் பீம் பிரச்சனை தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாக வன்னியர் சங்கம் புகார் வைத்துள்ளது. வன்னியர் சங்கங்கள், அமைப்புகள் பல படத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் கொதித்து போய் உள்ளன.

உப்பு கருவாடு
இந்த நிலையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சினிமா எடுக்கும் இயக்குனரை உள்ளூர் ஜாதி கட்சி பிரபலம் ஒருவர் மிரட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். தங்கள் சமூகத்தை புண்படுத்துவது போல காட்சிகள் இருப்பதாக கூறி அந்த கதாபாத்திரம் ஹீரோவிடம் மோதுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

இயக்குனர் ராதா மோகன்
இந்த காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. இதில் ஹீரோ கருணாகரன் பேசும் வசனம் பெரிய அளவில் டிரெண்டாகிக்கொண்டு இருக்கிறது. அதில், நீங்கதான் என்னோட படத்தை தடை பண்ண முயற்சி பண்ணுறீங்கன்னு தெரியும். என் படம் சரியா தவறானு சொல்ல சென்சார் போர்ட் இருக்கு. படம் வர வரைக்கும் வெயிட் பண்ணி பாருங்க.

இயக்குனர் ராதா மோகன்
நீங்க யார் சார் என்னோட படத்தை தடை பண்றதுக்கு. எனக்கு கூடதான் உங்களுக்கு அறிவு இருக்கானு சந்தேகம் இருக்கு. நீங்க நடத்துற பேக்ட்ரி காரணமா எனக்கு அல்சர் வருதுன்னு சொன்னா பேக்ட்ரியை மூடுவீங்களா? நாட்டில் அவ்வளவு பிரச்சனை இருக்கு. அதெல்லாம் பார்த்து உங்கள் மனசு புண்படலையா?
|
வன்புணர்வு
சின்ன குழந்தையை வன்புணர்வு பண்றாங்க, மக்கள் வறுமையில் இருக்காங்க, சாலை ஓரத்தில் பிச்சை எடுக்குறாங்க. தண்ணிக்கு கஷ்டப்படுறாங்க. லஞ்சம் வாங்குறாங்க. கல்வியை விக்கிறாங்க. போலி சாமியார், போலி டாக்டர். இப்படி பல விஷயங்கள் இருக்கிறது. இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவில்லையா.

சினிமா
இதெல்லாம் உங்கள் சமுதாயத்தை பாதிக்கவில்லையா? சினிமாதான் பிரச்சனையா? ஏன் அப்போதுதான் விளம்பரம் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பி இருப்பார். இந்த காட்சிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஜெய் பீம் பட சர்ச்சையை தொடர்ந்து இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications