"குறி" வெக்கிறீங்களே.. சூர்யா கண்டிக்க வேண்டியவர் .. அன்புமணி ஆதங்கம் உண்மையே.. வரிந்து கட்டும் பாஜக
சூர்யாவுக்கு, பாஜக விவசாய அணி கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: ''ஜெய்பீம் படத்தில் கொலையுண்ட ராஜாக்கண்ணு முதல் விசாரணை அதிகாரி வரை உண்மை நிகழ்வின் நிஜப்பெயரை கதாபாத்திரத்திற்கு சூட்டி விட்டு, ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரி சிறுபான்மையினர் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாறாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஏன்?" என்று நடிகர் சூர்யாவிற்கு பாஜக விவசாய அணி கேள்வி எழுப்பி உள்ளது.
ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரம் சூடு தணியாமல் உள்ளது.. இதுகுறித்து ஏராளமானோர் விளக்கம் தந்துவிட்ட நிலையிலும், பாமக தரப்பு தொடர்ந்து வாதம் செய்து வருகிறது.
பாமகவின் நிலைப்பாட்டிற்கு பாஜகவும் ஆதரவு தந்து வருகிறது.. அந்த வகையில், பாஜக விவசாய அணி மாநிலதலைவர் நாகராஜ் இதுகுறித்து சொன்னதாவது: ஜெய்பீம் படத்தில் காவல் துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடி குடும்பத்தின் துயரத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம்
1995ல் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் அக்காலகட்டத்தில் ரோட்டில் ஓடிய வாகனப்பதிவு எண் முதல் சாலையோர சுவர்களில் ஒட்டிய திரைப்பட போஸ்டர் என விசாரணை அதிகாரி விசாரணை துவக்க காலம் முதல் முடியும் காலம் என நாள் காட்டும் நாட்காட்டியின் மூலம் காட்டியுள்ளனர்.

ஆதங்கம்
ஆனால் ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரி சிறுபான்மையினர் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாறாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆதங்கத்தில் உண்மை இருக்கவே செய்கிறது.. சமீபகாலமாக உங்கள் குடும்பத்தினர் சிலர் தமிழக கலாசாரம், பண்பாடு, வழிபாட்டை சித்தரிக்கும் விதம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

எதிர்மறை சக்தி
ஜெய்பீம் படத்தில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்ட காவல் அதிகாரியின் பின்புறத்திலுள்ள நாட்காட்டியில் இடம் பெற்றுள்ள படமும், வழக்காடு மன்றத்தில் ஒரு கதாபாத்திரம் அடிக்கடி உச்சரிக்கும் ஒருசமயம் சார்ந்த சொல்லும், அவர்களை எதிர்மறை சக்தியாக காட்ட திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ளது.படைப்பு சுதந்திரம் பெயரில் பெரும்பான்மை மக்களின் கலாசாரம், பண்பாட்டை குறிவைத்து தாக்குவதும், அவர்கள் எதிர்மறையாக சித்திரிக்கப்படுவதும் திரைபடங்களில் தொடர்ந்து கொண்டுள்ளது. அன்புமணியின் கேள்விக்கு சூர்யா அளித்த பதில் ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா
இதனிடையே, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், விடவும், அதற்கு 'எம்10' தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்தள்ளது.. இதுகுறித்து தயாரிப்பாளர் எம்எஸ் முருகராஜ் வெளியிட்ட அறிக்கையில், படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், அதை சீர்குலைக்காமல் வைப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை என்பதை, வேதம்புதிது படம் எடுத்தவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
Recommended Video

சித்தரிப்பு
ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து, படம் எடுத்ததை கண்டித்து, அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல், குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல், சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தால் கண்டிக்க வேண்டியவரே.

நிர்வாணம்
சுதந்திரம் என்ற பெயரில், ரோட்டில் நிர்வாணமாக நடப்பது, இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அதுபோன்ற அசிங்கம் தான், சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம். ஆகச்சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும், புனைவு பெயர்களும் எதற்காக? 'குறியீடுகளை நீக்கி விட்டோம்' என சப்பைக்கட்டு கட்டுவது, சிறந்த கலைஞரின் சிறந்த பண்பு அல்ல என்று தெரிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications