Jailer 2: “பாக்ஸ் ஆபீஸ் தெறிக்குது”.. ஜெயிலர் 2.. 7 நாட்களில் ரூ.549+ கோடி! வசூல் வேட்டையாடும் ரஜினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' வசூல் விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் வெளியாகி 1 வாரத்தில் ரூ.549+ கோடி வசூலை குவித்த முதல் திரைப்படம் எனும் சாதனையையும் படைத்துள்ளது ரஜினியின் 'ஜெயிலர் 2' திரைப்படம்.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர் -2' திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Jailer 2

முதல் நாளிலிருந்தே 'ஜெயிலர் 2' படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பலரும் எதிர்பார்த்ததை விட ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. ஆயுத பூஜை பண்டிகை நாட்களின் விடுமுறையும் இணைந்து கொண்டதால் தென்னிந்திய அளவில் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருந்தது. இதனால் 6 நாட்களில் 500 கோடி வசூலை எட்டியதாக தகவல் வெளியாகி இருந்தது.

எனினும், 'ஜெயிலர் 2' படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் முதல் வார முடிவில் உலக அளவில் ரூ. 549 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jailer 2

இதுவே, மிக விரைவாக இவ்வளவு அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த 2.0, ஜெயிலர், கூலி திரைப்படங்கள் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்திருந்தன. இதே கூட்டணியின் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் மொத்தம் 525 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் ஜெயிலர் 2 இந்த வசூலை வெறும் 7 நாட்களில் கடந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் படங்களில் 'ஜெயிலர் 2' நான்காவது படமாக ரூபாய் 500 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. ஒரே வாரத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படம் ரூ. 549 கோடி வசூலை எட்டியுள்ளது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+