ஜெயிலர் FDFS ரிவ்யூ செய்தேன்! 23 ஆண்டு ஊழியரான என்னை நிறுவனம் நீக்கிவிட்டது! ரஜினி நாராயணன் வேதனை
சென்னை: ஜெயிலர் படத்திற்கு FDFS ரிவ்யூ கொடுத்தேன். அதனால் 23 ஆண்டுகளாக பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து என்னை பணிநீக்கம் செய்துவிட்டார்கள். அது பற்றியெல்லாம் நான் கவலைப்படவே இல்லை என ரஜினியின் தீவிர ரசிகர் ரஜினி நாராயணன் (Jailer Rajini Narayanan) தெரிவித்துள்ளார். தற்போது கூலி படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சி (First Day First Show) பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் ரஜினி நாராயணன். பின்னர் இவர் அந்த படங்களுக்கு விமர்சனங்களையும் சொல்வதுண்டு.

அதில் ரைமிங்காக சில விஷயங்களை பேசுவதால் நிறைய பேர் இவரை பேட்டி எடுப்பார்கள். ரஜினியே அசந்து போகும் வகையில் இவர் அடிக்கும் பஞ்ச், சக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.
அந்த வகையில் கூலி திரைப்படம் வெளியான போது ரஜினி நாராயணன் ரிவ்யூ கொடுத்தார். அதில், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளே வந்து படம் பார்க்க ஆவியா உக்காந்துனு இருந்தாரு. நான் ஒரு ஷோ பார்த்துட்டு போறேன்ப்பான்னு! சிவாஜியே கால்ல விழுந்துட்டாருங்க.
பனை மரத்துல நுங்கு, தலைவனை எதிர்த்தால் சங்கு, அவர்கிட்ட கேக்காத பங்கு, இதெல்லாம் சமூகவலைதளங்களில் பரப்புவாங்க ஐடி விங்! இடியும் மின்னலும் தலைவன் பேரை கேட்டவுடன்தான் ஊருக்குள் வரும் போகும். ஆக்ஷனில் நெருப்பு பறக்கும்.
ப்ரூஸ்லி வந்து காலில் விழுறாருனு சொல்லிட்டேனே. அந்தளவுக்கு ஆக்ஷன் இருக்கு. இது கோயில் கும்பாபிஷேகம், படமில்லை. முதல் பாதியும் இரண்டாவது பாதியும் சரி தலைவர் மிரட்டிட்டாரு! ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மெசேஜ் சொல்றாரு! அந்த மெசேஜ் போற ரீசன் வந்து உடம்பெல்லாம் புல்லரிக்குது!
இப்பவும் 2 ரூபாய் பீடியை பிடித்து ஒன்றரை கோடி அடிச்சிட்டாரு! தலைவர் performஸ ஆயிரம் கோடி ரூபாய் வசூல் confirm. இனி தீபாவளி இல்லை, பாபாவளி, பிள்ளையார் சதுர்த்தி இல்லை, ரஜினி சதுர்த்தி என ஆஹோ ஓஹோ என பாராட்டிவிட்டார்.
அது போல் நிருபர்கள் ரஜினி என குறிப்பிட்டு நாராயணனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தலைவர் என குறிப்பிட்டு சொல்லுமாறு பேசினார். இந்த வயதிலும் ரஜினி அத்தனை எனர்ஜியுடன் நடிப்பதாகவும் அவர் பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு FDFS பார்த்துவிட்டு ரிவ்யூ கொடுத்ததால் தான் 23 ஆண்டுகளாக பணியாற்றி அலுவலகத்தில் இருந்து தன்னை பணிநீக்கம் செய்துவிட்டதாக சொல்கிறார் ரஜினி நாராயணன். அதே நேரம் பணி நீக்கம் குறித்து நான் கவலைப்படவே இல்லை. அந்த நேரத்தில் தலைவரை நினைத்துக் கொண்டேன் என ரஜினி நாராயணன் தெரிவித்தார்.
ரஜினி படம் ரிலீஸானால் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்+ சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து வரும் நிலையில் நாராயணனை ஒரு நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications