ஜெய்சங்கர் மகன் இவர் தானா? 400 பிள்ளையார்கள்.. ஏலம் போட்டு இலவச ஆபரேஷனுக்கு உதவிய "ஜெய்"
சென்னை: என் அப்பாவுடன் நடித்தவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார்கள்.. எஸ்ஏசி டைரக்ஷனில் நிறைய படங்கள் அப்பா நடித்திருக்கிறார்.. சந்திரலேகா, விஷ்ணு உட்பட விஜய் சாருடன் அப்பா நடித்துள்ளார்.. எந்த கட்சியையும் சாராதவர் என்பதால், என் அப்பா அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்தார்" என்று மறைந்த மூத்த நடிகரும், மக்கள் கலைஞருமான ஜெய்சங்கர் மகன், சஞ்சய் சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Channel 5 Cinema சேனலுக்கு பேட்டி தந்துள்ள சஞ்சய் சங்கர், "பணம் என்பது மனித வாழ்வில் வந்து போகக் கூடியதுதான்.. அது முக்கியமானது என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது" என் அப்பா என்னிடம் சொன்ன முக்கிய விஷயம்.. உச்சக்கட்ட புகழில் இருந்தபோதும் எனது தந்தை அனைவரிடமும் நடுநிலையாகவும் எளிமையாகவும் நடந்துகொண்டார்.

ஜெய்சங்கர் மகன் இவர் தானா
குடி மற்றும் சிகரெட் போன்ற பழக்கவழக்கங்களை விட்டு விலகி இருக்க வேண்டும், யாரிடமும் ஆட்டிடியூட் காட்டாமல் எல்லாரிடமும் நட்பாகப் பழக வேண்டும், மற்றவர்கள் நம்மை பற்றி தவறாக பேசினால் அதை பெரிதுபடுத்தாமல் விலகி இருக்க வேண்டும், எதையும் நிரந்தரமாக நினைக்காமல் வாழ்க்கையில் எளிமையாக இருக்க வேண்டும், யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் அப்பா எனக்கு கற்று தந்தார்.
அப்பா, அண்ணனின் இலவச சிகிச்சைகள்
பெரிய படங்களை விட சின்ன படங்களிலும், சிறந்த கேரக்டர் ரோல்களிலுமே நடிக்கவே விரும்புகிறேன். சினிமாவைவிட, டிவி சீரியல்கள் மூலம் மக்களிடம் தினமும் விரைவாகவும் நெருக்கமாகத் தொடர்பு கொள்ள முடியும் என்பதால், நல்ல வேடங்கள் வந்தால் சீரியல்களில் நடிக்கவும் நான் தயார்.
மக்கள் என்னுடைய அப்பா வைத்திருந்த நம்பிக்கை மிகப் பெரியது. ஏலங்கள் நடத்தி, அதன் மூலம் சேகரிக்கப்படும் தொகையைக் கொண்டு ஏராளமான இலவச மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு உதவினார்.. "உதவும் கரங்கள்" போன்ற அமைப்புகள் மூலமாகவும், ஏலங்கள் நடத்தியும் பல நல்ல காரியங்களை முன்னெடுத்தார்...
பிள்ளையார், ஜெய் அடையாளம்
வீட்டிற்கு 300, 400 சின்ன பிள்ளையார்களை வாங்கி வருவார்.. அந்த பிள்ளையார்களில் "ஜெய்" என்று பொறிக்கப்பட்டிருக்கும் அடையாளங்களும் இடம்பெற்றிருக்கும். அந்த பிள்ளையார்களை ஏலத்தில் விற்று, 3 ஆயிரம், 5 ஆயிரம் பெற்று, அந்த வசூல் பணத்தை "உதவும் கரங்கள்" போன்ற அமைப்புகளுக்கு தருவார்.. மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் அத்தகைய ஆன்மிக மற்றும் நற்பணி நடவடிக்கைகளோடு இணைந்து பயணித்தன.
என்னுடைய அண்ணனும் கடின உழைப்பால் உயர்ந்து இன்று நாட்டின் தலைசிறந்த கண் மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அப்பாவை போல, அண்ணனும் இலவச அறுவை சிகிச்சைகளைச் செய்து "சங்கர்" என்ற பெயரை குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு பிராண்டாக என் அண்ணன் மாற்றியுள்ளார்.
எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி
என் அப்பாவுடன் நடித்தவர்கள் முதலமைச்சராகி விட்டார்கள்.. எம்ஜிஆர் சாரும் என்னுடைய அப்பாவும் ஒரு படத்தில் நடிக்க வேண்டியது.. ஆனால், அது கடைசி நேரத்தில் மிஸ்ஸாகிவிட்டது.. எம்ஜிஆர் சார் மிகவும் சீனியர் என்பதால், அவர் மீது என் அப்பா மிகுந்த மரியாதையை வைத்திருந்தார்..
அதேபோல கலைஞர் மு. கருணாநிதி சார் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆடு பாம்பே, வண்டிக்காரன் மகன் உட்பட பூம்புகார் புரொடக்ஷனில் வெளிவந்த படங்களில என் அப்பா நடித்துள்ளார்.. அதற்கெல்லாம் கலைஞர்தான் கதை வசனம்.. என்னுடைய அக்காவுக்கும், கலைஞர் சாருக்கும் ஒரே நாளில்தான் பிறந்த நாள்.. அதனால் ஜுன் 3ம் தேதி, என்னுடைய அக்காவை கலைஞர் வீட்டுக்கு அப்பா அழைத்து சென்று, ஆசீர்வாதத்தை வாங்குவார்.
ஜெயலலிதா, விஜய்
அதேபோல ஜெயலலிதா மேம் கூட 15, 20 படங்கள் என் அப்பா நடித்தார்.. இவர்களது ஜோடி, திரையில் பொருத்தமாக இருக்கும் என்று அப்போது நிறைய பேர் சொன்னார்கள்.. கடைசி வரை என் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார் ஜெயலலிதா மேம்..
இப்போதுள்ள முதலமைச்சர் தளபதி சாரிடமும் என் அப்பா நடித்துள்ளார்.. எஸ்ஏசி டைரக்ஷனில் நிறைய படங்கள் அப்பா நடித்திருக்கிறார்.. அதேபோல சந்திரலேகா, விஷ்ணு உட்பட அப்பா நடித்துள்ளார்.. எந்த கட்சியையும் சாராதவர் என்பதால், என் அப்பா அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்தார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
