Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லிம்கள் இதை செய்தே ஆகனும்.. சிஏஏ போல் பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்த ஜமாத்துல் உலமா சபை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது சிவில் சட்டத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கும் மத்திய அரசு இது தொடர்பாக மக்களிடம் ஆன்லைனில் கருத்து கேட்டு வரும் நிலையில், மக்கள் நிரப்ப வேண்டிய விபரத்தை ஜமாத்துல் உலமா சபை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மசூதிகளின் செயல்பாடுகள் மற்றும் இஸ்லாமிய உலமாக்களின் தலைமையகமாக இருப்பது ஜமாத்துல் உலமா சபை. இந்த அமைப்பு வழங்கும் அறிவுறுத்தல்களின்படியே பெரும்பாலான மசூதிகள் மற்றும் உலமாக்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

Jamathul Ulama adviced all Muslims and Muslim firm to send mail against UCC

வழிபாடு, மசூதி நிர்வாகம் சார்ந்த விசயங்கள் மட்டுமின்றி இந்தியாவில் நிறைவேற்றப்படும் இஸ்லாமியர் சார்ந்த சட்டங்கள் தொடர்பாகவும் இந்த அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முத்தலாக் மசோதா, குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்பிஆர் போன்றவற்றில் அழுத்தமான எதிர்ப்பை இந்த அமைப்பு பதிவு செய்தது.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசு கையில் எடுத்து இருக்கும் பொது சிவில் சட்டம் குறித்தும் இந்த அமைப்பு இஸ்லாமியர்களிடம் ஆன்லைனில் கருத்துக்களை பதிவிட அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மசூதி நிர்வாகங்கள், முஹல்லா ஜமாத்துகளுக்கு சுற்றறிக்கைகள் சென்றுள்ளன.

பெரும்பாலான மசூதிகளிலும் இந்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில், "கண்ணியமிகு இமாம்கள் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து மஸ்ஜீதுகளின் நிர்வாக பெருமக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பொது சிவில் சட்டம் குறித்து பொது மக்களிடம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டிருக்கிறது.

அதை ஒரு மாதத்துக்குள் (14,07.2023) அனுப்ப வேண்டும் என கூறியிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். ஆதலால் இது தொடர்பாக நமது கடமையை ஆற்றுவது மிக அவசியம் ஆகும். வனவே இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு கீழ்கானும் ஐந்து விஷயங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றை முழுமையாகவோ இவற்றில் சிலவற்றையோ இதற்குரிய ஆன்லைன் ஃபார்மில் தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில் காப்பி அண்ட் பேஸ்ட் செய்யவும். இது பொதுமக்கள் ஒவ்வொருவரும் அனுப்புவதற்கானது. இதற்கான விழிப்புணர்வை மஸ்ஜிதுகளின் இமாம்கள் மற்றும் நிர்வாகப் பெருமக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் அறிவிப்பு செய்து மீண்டும் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளின் சார்பில் கருத்து தெரிவிக்கும் விஷயத்தில் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மிகத் தெளிவான விரிவான கருத்தை இன்ஷா அல்லாஹ் தெரிவிக்கும். அவ்வாறே பதிவு செய்யப்பட்ட இதர அமைப்புகளும் தங்களின் கருத்தை விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று கேட்டுக்கொண்டு உள்ளது.

ஆங்கிலத்தில் உள்ள, "NO NEED OF UNIFORM CIVIL CODE FOR SOME OF THE FOLLOWING MAIN REASONS
1. Article 25 Guarantees Right to Freedom of Religious Practice, so practicing personal laws cannot be interfered even by the State.
2. UCC is against the Spirit of the Secular Character of our Constitution.
3. Indian Legal System is based on pluralism and the application of UCC will result in its complete destruction.
4. The Parliamentary System of India itself is in the model of Unity in Diversity. So, UCC cannot exist in parallel.
5. The Supreme Court of India has time and again upheld the Constitutional Validity of Personal Laws over UCC"

ஆகிய 5 விசயங்களை காப்பி செய்து, https://legalaffairs.gov.in/law_commission/ucc/index.php என்ற இணைய முகவரிக்கோ அல்லது [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கோ NO NEED UNIFORM CIVIL CODE என்று குறிப்பிட்டு உங்கள் கருத்தை அனுப்பலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+