ஜேம்ஸ் வசந்தன் கடும் அதிருப்தி, கோபம்.. பிக்பாஸ் முத்துக்குமரன் பேசிய வசனம்தான் காரணம்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன், சிவாஜி பேசிய வசனங்களை பேசியது எல்லாம் சரி, ஆனால் இத்தனை உச்சரிப்பு பிழைகளை அவர் எப்படி செய்யலாம் என ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Bigg Boss நிகழ்ச்சியில் முத்துக்குமரன் என்றொரு போட்டியாளர். விஜய் தொலைக்காட்சியின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் பேச்சாளராக வந்து அடையாளம் பெற்ற திறமைமிகு இளைஞன்.

இந்த வீட்டினுள் நடக்கிற பலவிதப் போட்டிகளிலும் மிகச் சாதுர்யமாக, கவனமாக, அறிவார்ந்து விளையாடி எல்லார் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருப்பவன். அந்த வீட்டுவாசிகள் எல்லாரும் தங்கள் பல்வேறு திறமைகளைக் காட்டிய ஒரு நிகழ்வில் இவன் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதி, சிவாஜி கணேசன் அவர்கள் பேசி நடித்த ஒரு காட்சியை அட்டகாசமாகப் பேசி அசத்தினான் என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டேன்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் கொஞ்சு தமிழில் பேசி கேட்போரைப் பரவசமடையச் செய்தான் என அறிந்தேன். அதற்கு பாராட்டு மழை இன்னமும் கொட்டிய வண்ணம் இருக்கிறது. நேற்று அந்தக் காட்சியை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்தார். பார்த்தேன். மக்கள் சொன்னது அனைத்தும் சரி. அடுத்தத் தலைமுறை தமிழை அறிந்துணர்ந்திருப்பது மெல்லத் தமிழினி மேலும் உயரும் என உணர்த்தியது. மகிழ்ந்தேன்!
ஆனால், ஒரு அம்சம் என் மனதை உறுத்தியது. ஒன்றுதான்.. ஆனால் அது தமிழின் அடிப்படை. எந்த மொழியின் அடிப்படையும் அதுதான். உச்சரிப்பு. இத்தனைப் பக்க உரையை துல்லியமாக மனப்பாடம் செய்து ஆணித்தரமான குரலில் அற்புதமாகச் சொல்லத் தெரிந்த அந்த இளைஞனுக்கு உச்சரிப்பு இவ்வளவு பிழையாக இருப்பது எப்படி தெரியாமல் போகிறது?
ல, ள, ழ, ன எழுத்துகள் அவன் பேசிய ஐந்து நிமிடங்கள் முழுவதும் தவறாகவே உச்சரிக்கப்பட்டன. இவ்வளவு தமிழ் தெரிந்த முத்துக்குமரன் எப்படி இந்தத் தவற்றைச் செய்யலாம்? உச்சரிப்புதானே மொழி? இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இவர் சமூகம் சார்ந்த விஷயங்களில் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இவர் சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னாளில் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அண்மையில் இளையராஜாவை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் இவர் படம் தயாரிப்பிலும் இருந்து வருகிறார். இதனால் புதிய முகங்களை அறிமுகப்படுத்த தனது பேஸ்புக் மூலம் தகவல்களை பெற்று பயன்படுத்திக் கொள்கிறார். அது போல் யாருக்காவது இசை திறமை இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்து வருகிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications