“மிஸ்டேக்” இருக்கு.. கண்டுபிடித்த ஜேம்ஸ் வசந்தன்! அரசு ஜல்லிக்கட்டு மைதான பெயர் பலகையில் பிழையாம்
சென்னை: மதுரையில் அமைக்கப்பட்டு உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு உள்ள பெயரில் எழுத்துப் பிழை உள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அப்படி என்ன பிழை அதில் உள்ளது? விரிவாக பார்ப்போம்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "மதுரையில் வருகிற 24 ஆம் தேதியன்று திறக்கப்பட இருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்தான். நேற்று அதைப் பற்றிய ஒரு தொகுப்பை தொலைக்காட்சியில் பார்த்தேன். அரங்கத்தின் நுழைவாயிலில் தமிழிலும் இங்லிஷிலும் "ஏறு தழுவுதல்" என்று பொறித்திருப்பதைக் கண்டேன். இங்லிஷில் எழுதப்பட்டிருப்பது பிழையாக உள்ளது. "AERUTHAZHUVUDHAL" என்றிருக்கிறது. தமிழில், "ஏறு தழுவுதல்" என்கிற சொல்லில் "ஏ" என்கிற முதலெழுத்து உயிரெழுத்தாக இருப்பினும் அது உயிர்மெய் ஒலியாகத்தான் (யே) உச்சரிக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் இது "YERU..." என்றே எழுதப்பட வேண்டும். இங்லிஷில் எழுதுவதன் நோக்கமே தமிழ் தெரியாதவர்க்கு உதவத்தான். இப்போது எழுதப்பட்டிருக்கும் விதத்தில் வாசித்தால் வெளிநாட்டவர் இதை "AEROPLANE" உச்சரிப்பதைப் போல தொண்டையிலிருந்து உயிரெழுத்தாக உச்சரிப்பார்கள். இரண்டாவது பிழை தீரா விவாதமான "ழு" ஒலி. வெளிநாட்டவர் "AERUTHAZHUVUDHAL" என்பதை "ஆறுதஸுவுதல்" என்றே வாசிப்பார்கள். "YERUTHALUVUDHAL" என்று எழுதினால் "ஏறுதலுவுதல்" என சரியான உச்சரிப்புக்கு அருகில் வர உதவும். பிடிவாதம் பிடிக்காமல் இதைச் சரிசெய்வது மொழியின் நலம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் ரூ.44 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், 5,000 க்கும் அதிகமானோர் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் மைதானத்துக்கு இணையாக 3 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் பார்வையாளர் மாடங்கள் பாதுகாப்பான முறையில் பாரம்பரியம் கலந்த நவீன தொழில்நுட்ப வடிவமைப்புடன் அமைக்கப்பட்டன.

இதன் தரைத்தளத்தில் வாடிவாசல், மாடுபிடி வீரர்களுக்கான இடம், நிர்வாக அலுவலகம், அருங்காட்சியகம் போன்றவை உள்ளன. முதல் தளத்தில் விருந்தினர்கள் அமரும் அறை மற்றும் தங்கும் அறைகள், உணவு அறைகள் உள்ளன. 2 ஆம் தளத்தில் உபகரணங்கள் வைப்பறை உள்ளது. 3 ஆம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம் என பெயர் வைக்கப்பட்டு உள்ள நிலையில் அதன் ஆங்கில பலகையில் பிழை இருப்பதாகவே ஜேம்ஸ் வசந்தன் சுட்டிக் காட்டி உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications