ஜேம்ஸ் வசந்தன் குபீர் கணக்கு.. விஜய்க்கு ஓட்டு போட்ட 35% பேரில் 20% அப்செட்? இப்பவே புலம்பல் ஆரம்பமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவுக்கு வாக்களித்த 35% மக்களில் 15% முதல் 20% வரை இப்போது ஏமாற்றமடைந்து புலம்பத் தொடங்கிவிட்டனர். மீதமுள்ள சில ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் போலி பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றாலும், மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டனர். இவர்கள் தகுதியவற்றவர்கள் என்பதையும் உணர ஆரம்பித்து விட்டனர். இது வரப்போகும் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்" என்று இசையமைப்பாளரும் அரசியல் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

The TN Voice சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜேம்ஸ் வசந்தன், "நீண்ட காலமாக சோஷியல் மீடியாவில் மோதிக்கொண்ட விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், இப்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டதைப் பார்த்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் அஜித்தின் ஆதரவாளர்களை கவர விஜய் நட்புக் கரம் நீட்டுகிறார்.

James Vasanthan

ஜேம்ஸ் வசந்த் அதிருப்தி

விஜய் அஜித்துடன் இணக்கம் காட்டுவதற்கு வரவிருக்கும் இடைத்தேர்தலும் ஒரு முக்கிய அரசியல் காரணம்.. இந்த இடைத்தேர்தல் சமயத்தில் அஜித்தின் ஆதரவாளர்களைத் தன் பக்கம் ஈர்த்து, அவர்களின் வாக்குகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதற்கே விஜய் இத்தகைய நட்பு பிம்பத்தை வெளிப்படுத்துகிறார்..

அதேபோல, கார் ரேஸ் போட்டிகளுக்கு அரசின் வணிகச் சலுகைகளைப் பெற அஜித் இந்த சந்திப்பை பயன்படுத்துகிறார். 2 பேருமே சுயநலத்திற்காக செயல்படுகிறார்கள்.. எனவே நடிகர்கள் பின்னால் இளைஞர்கள் சென்று வாழ்க்கையை வீணடிக்காமல் பொதுநலத் தலைவர்கள் பின்னால் செல்ல வேண்டும்.

தமிழக முதலமைச்சர் லண்டன் பயணம்

தமிழக முதலமைச்சராக அவர் லண்டன் சென்றுள்ளதாக தெரியவில்லையே.. தொழில் முதலீடுகளை ஈர்க்கவே லண்டன் சென்றுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களைச் சந்தித்ததாக எந்த செய்தியும் இல்லை.. முதலீடுகளை ஈர்க்க தொழில் துறை அமைச்சர்தானே முதல்வருடன் செல்ல வேண்டும்? தொழிற்துறை அமைச்சரோ அல்லது ஐஏஎஸ் அதிகாரிகளோ லண்டனுக்கு செல்லவில்லையே ஏன்?

அதற்கு பதிலாக, விளையாட்டுத் துறை அமைச்சரையும், சொந்தக் கார் டிரைவரையும் அழைத்துச் சென்றிருப்பது அப்பட்டமான பொய்... லீவில் செல்வதாக இருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே.. அரசு செலவில் தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்வது மக்களை ஏமாற்றும் வேலை. தொடர்ந்து பொய், பித்தலாட்டமாகவே இருந்தால் எப்படி?

அதிகார துஷ்பிரயோகம் இது கிடையாதா

முந்தைய அரசை வாரிசு ஆட்சி என்று விமர்சித்த விஜய், இப்போது தனது கார் டிரைவரின் மகனை எம்எல்ஏ ஆக்குவதும், டிரைவரை அரசு செலவில் லண்டனுக்கு அழைத்துச் செல்வதும் அதிகாரத் துஷ்பிரயோகமும் வாரிசு அரசியலுமே ஆகும்... லண்டனில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் 14 பேருக்கு ஒரு ரூமுக்கு, ஒரு நாளைக்கு 2.5 லட்சம் ரூபாய் வீதம் மக்கள் வரிப்பணம் விரயம் செய்யப்படுகிறது. ஒருத்தருக்கு மட்டுமே, ஓட்டல் வாடகை வாரம் 11 லட்சம் ஆகிறது.. அப்படியானால் 14 பேருக்கு ஒரு வாரத்துக்கு எவ்வளவு ஆகும்? இதெல்லாம் நம்ம பணம் தானே?

கஜானாவில் பணம் இல்லை என்கிறார்.. ஆனால், ஒரே நாளில், மேட்டூர் அணைத் திறப்பிற்கு வெறும் 6 கோடி ரூபாய் செலவழித்த அரசு, ஊதிய உயர்வு கேட்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 850 ரூபாய் கூட வழங்க மறுக்கிறது.

விஜய் பாட்டிகளிடம் பேசுவது போன்ற நிகழ்வுகள் எம்ஜிஆர் காலத்து அரசியல் விளம்பர நாடகங்களை போலவே இருக்கின்றன.. டெல்லி பயணங்களின் போது மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர்களுடன் சென்று லட்சக்கணக்கில் செலவழிப்பது எந்த விதத்தில் எளிமையாகும்?

அதிருப்தியில் தவெகவினர்?

வாக்களித்த 35% மக்களில் 15% முதல் 20% வரை இப்போது ஏமாற்றமடைந்து புலம்பத் தொடங்கிவிட்டனர். மீதமுள்ள சில ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் போலி பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றாலும், மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டனர். இவர்கள் தகுதியவற்றவர்கள் என்பதையும் உணர ஆரம்பித்து விட்டனர்.

பதவியேற்ற 25 நாட்களிலேயே 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியில் இணைந்தது பேரதிர்ச்சியாகும்.. போதிய மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சியை தக்கவைக்க பிற கட்சி அலுவலகங்களுக்குச் சோபா அனுப்பி ஆதரவு கோரியதன் பின்னணியில் பெரும் கேள்வி உள்ளது.. சோபா அனுப்பியதை நகைச்சுவையாகவே கடந்து விட்டோம்..

அதனால் வரவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் மூலம் விஜய்யின் ஆட்சி மீதான மக்கள் அதிருப்தியும் ஆதரவு சரிவும் வெளிப்படும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+