விஜய் செய்தது அப்பட்டமான தவறு.. திடீரென விளாசிய ஜேம்ஸ் வசந்தன்! கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல்
சென்னை: சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் இரு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய கமல்ஹாசனுக்குச் சொல்லவே இல்லை. விஜய் பிறக்கும் முன்பே அவர் நடிகர். பல்கலை வித்தகர். அப்பட்டமான தவறை செய்துவிட்டீர்கள் விஜய். நீங்கள் என்ன காரணம் சொன்னாலும், அதை ரசிகர்களும், வாக்காளர்களும், பொதுமக்களும் ஏற்கப் போவதில்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடந்தது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கள் இன்னும் தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது.

பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாக கூறிய நடிகர் விஜய், திராவிடமும் - தமிழ் தேசியமும் இருகண்கள் என்று கூறியது இன்னும் விவாதமாகி வருகிறது. தற்போது தமிழக அரசியல் களம் என்பது விஜயின் மாநாடு மற்றும் அதில் விஜய் பேசிய பேச்சுக்களை சார்ந்தே உள்ளது.
இதற்கிடையே தான் நேற்று சீமான் பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு விஜய் தனது எக்ஸ் பக்கம் வழியாக சகோதரர் எனக்கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கள் என்று கூறிய விஜயை கடந்த 1ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாட்ட பொதுக்கூட்டத்தில் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தம்பி ஒன்னு சாலையில் அந்த பக்கம் நில்லு. இல்லைனா இந்த பக்கம் நில்லு.. நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்துப்போவ என விமர்சனம் செய்தார். ஆனால் அதனை மறந்து விஜய் நேற்று பிறந்தநாள் கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பாக நேற்று முன்தினம் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாடினார். அதற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது விவாதமான நிலையில் கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் உள்ளதால் தான் விஜய் வாழ்த்து சொல்லவில்லை எனவும் தகவல்கள் பரவின. அப்படியானால் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்களுக்கும் விஜய் ஏன் வாழ்த்து கூறினார்? என்ற கேள்விகள் எழுந்தன. தற்போது இது இணையதள பக்கங்களில் விவாதமாகி வருகிறது.
இந்நிலையில் தான் கமல்ஹாசனுக்குபிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் தவிர்த்த விஜயை இசையமைப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அரசியல் பின்புலமே இல்லாமல், அதில் ஒரு ஈடுபாடு இருக்கிறதென்பதை சூசகமாகக் கூட மக்களுக்குச் சொல்லாமல், சடாரென குதித்த விஜய்தான் அண்மைக்காலத் தமிழக அரசியல் விவாதப் பொருள்.
இவர் ஏன் வரவேண்டும்? இங்கில்லாத எதை இவர் வந்து தரப்போகிறார்? என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடுவார்?. இவைதான் வாக்காளர்கள் மனதிலுள்ள கேள்விகள். விடைகளுக்காகக் காத்திருக்கின்றனர். இதனால் அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. இதை விஜய்யும் அறிவார்.
இருந்தும் ஒரு தவற்றை இவ்வளவு தொடக்கத்திலேயே செய்தது மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. அன்புமணி ராமதாஸ் இரண்டாம் தலைமுறை அரசியல்வாதி. சில சூழல்களில் அரசியல் பார்வையின் வழியாக சில திரைப்படங்களைக் கூட எதிர்த்தவர்கள் அவர்கள். திரைப்பட நாயகர்களையும் விமர்சித்தவர்கள். விஜய்க்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இருந்தும், அண்மையில், அவரைத் தொலைபேசியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார். நல்ல விஷயம்தான். இது அரசியல் பண்பு. நேற்று சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார். ஆனால், இரு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய கமல்ஹாசனுக்குச் சொல்லவே இல்லை. குறிப்பிடும்படியான அவருடைய 70-வது பிறந்த நாள் வேறு!
கமல் உங்கள் துறையின் மூத்த கலைஞர். நீங்கள் பிறக்கும் முன்பே அவர் நடிகர். புதுமைகளுக்கு முன்னோடி. பல்கலை வித்தகர். இந்தியத் திரைப்படத்துறையின் உயர்ந்த கலைஞரில் ஒருவர். எல்லோராலும் பெரிதும் மதிக்கப்படுகிறவர். இவையனைத்தையும் தாண்டி, ஒரு அரசியல் கட்சித்தலைவர். அப்பட்டமான ஒரு தவற்றைச் செய்துவிட்டீர்கள், விஜய்!. நீங்கள் என்ன காரணம் சொன்னாலும், அதை ரசிகர்களும், வாக்காளர்களும், பொதுமக்களும் ஏற்கப் போவதில்லை'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!












Click it and Unblock the Notifications