ஒரு ட்ரிப் போயிட்டு வந்தா அம்பானிதான்! யுரேனஸ், நெப்டியூனில் பெய்யும் "வைர" மழை.. எப்படி தெரியுமா?
சென்னை: நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களில் வைர மழை பெய்வதை ஆராய உள்ளனர்.
Recommended Video
பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறு தெரியாத கிரகங்களை, வேறு பால்வெளியில் இருக்கும் கிரகங்களை , நட்சத்திரங்களை ஆராய்வதற்காகவே James Webb என்ற தொலைநோக்கியை நாசா மற்றும் ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி விண்ணிற்கு அனுப்பி உள்ளது. hubble தொலைநோக்கிக்கு ஓய்வு பெறும் காலம் வந்துவிட்ட நிலையில்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி களமிறக்கப்பட்டுள்ளது.
Hubble போல இல்லாமல் The James Webb Space Telescope (JWST) அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்க கூடியது. இது மிக அதிக அளவிலான வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. இதில் ஒரு பக்கம் தங்க முலாம் பூசிய சோலார் பேனல்கள் சூரிய ஒளி எதிர்ப்பு பில்டர்களும் இருக்கும்.

என்ன தொலைநோக்கி
இது 270 டிகிரி வெப்பநிலையை தாங்கும். இதன் மறுபக்கம் சூரியனுக்கு எதிர்ப்பக்கம் என்பதால் மைனஸ் 270 டிகிரி குளிர் வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எடை 6,500 kg. பல்வேறு நட்சத்திரங்கள் மட்டுமின்றி யுரேனஸ், நெப்டியூன் போன்ற நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் குறித்தும் இந்த தொலைநோக்கி ஆய்வுகளை செய்ய உள்ளது. வரும் நாட்களில் இதன் புகைப்படங்களை அந்த தொலைநோக்கி வெளியிடும்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
அதேபோல் அந்த கிரகங்களில் வளிமண்டலத்தில் இருக்கும் பொருட்கள் பற்றிய துல்லியமான புகைப்படங்களையும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட உள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு கிரகங்களில் வைர மழை பொழிகிறதா என்பதையும் இந்த தொலைநோக்கி உறுதி செய்ய உள்ளது. இந்த இரண்டு கிரகங்களிலும் வைரம் மழையாக பொழிவதாக பல வானிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

வைர மழை
பல காலமாக இந்த தியரி உள்ளது. இரண்டு கிரகங்களும் நீல நிறத்தில் காணப்படும். காரணம் இரண்டிலும் மீத்தேன் அதிகம் உள்ளது. இந்த மீத்தேன் முழுக்க கார்பன் மூலம் உருவானது. அதேபோல் இதன் மேல் பகுதியில் அதீத அழுத்த மற்றும் வெப்பநிலை உள்ளது. இதன் காரணமாக , இந்த கார்பன் அப்படியே அழுத்தப்பட்டு, வைரமாக மாற்றப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள்.

எப்படி பெய்யும்
நாசா விஞ்ஞானிகள் பலர் இதை உறுதி செய்துள்ளனர். நாசா விஞ்ஞானி ரோ, நாசா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, அந்த இரண்டு கிரகங்களில் மீத்தேன் உள்ளது. அதில் இருக்கும் கார்பன் வைரமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. இவை மிகவும் வலிமையாக, அதிக எடையுடன் காணப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த வைரம் அங்கு வளிமண்டத்தில் இருந்து கீழே மழை போல பெய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆராய்ச்சி
ஆனால் நாம் பார்க்கும் மழை போல இது இருக்காது. வானத்தில் இருந்த வைர குண்டுகளை நம் மீது வீசினால் எப்படி இருக்கும். அது போல இங்கு வைரம் குண்டுகள் போல நம் மீது விழும். அங்கு நாம் வாழவே முடியாது. எல்லோரும் வைரம் விழுந்து சாக வேண்டியதுதான் என்று நாசா விஞ்ஞானி ரோ அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

உறுதி செய்யும்
தற்போது அனுப்பப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் சில சந்தேகங்களுக்கு விடை காண முடியும். அதேபோல் வைரம் விழுவதையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் உறுதி செய்ய முடியும். ஆனால் வைர மழை பெய்தாலும் அங்கு உள்ள வானிலை சூழ்நிலை காரணமாக நாம் அங்கே சென்று அதை எடுத்துவிட்டு வர முடியும். சூழ்நிலை மட்டும் சரியாக இருந்தால்.. யுரேனஸ், நெப்டியூனுக்கு ஒரு ட்ரிப் போயிட்டு இன்ஸ்டாவில் வைர கூடையோடு ரீல்ஸ் போட்டு இருக்கலாம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications