சூப்பர் அண்ணன்.. விஜய்க்கு ஆதரவாக ஸ்டாலின் போட்ட பதிவு.. காங்., மாணிக்கம் தாகூர் கொடுத்த ரிப்ளை
சென்னை: விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வரிசையில் பாஜகவின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதனால் விஜய் விவகாரத்தில் சென்சார் போர்டை ஸ்டாலின் கண்டித்துள்ளார். இதற்கு‛‛சூப்பர் அண்ணன்'' என பாஜகவின்விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கொடுத்த ரிப்ளை அதிக கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் தான் அவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது படத்துக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் ஜனநாயகன் திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் ரிலீஸாக இருந்தது. ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று கிடைக்காத நிலையில் பராசக்தி மட்டும் நாளை ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கும் கூட நீண்ட இழுபறிக்கு பிறகு தான் சென்சார் சான்று வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பராசக்திக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட போது, 25 இடங்களில் காட்சிகள், வசனம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் இன்று முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய அரசை விமர்சனம் செய்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு செய்தார்.
அதில், ‛‛CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!'' என்று கூறியிருந்தார். ‛ஜனநாயகன்' படத்துக்கு இன்னும் சென்சார் சான்று வழங்காத விவகாரத்தில் மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் சீண்டியிருந்தார்.
இந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் ஜனநாயகன் அல்லது பராசக்தி என்று எந்த படத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக தான் குரல் கொடுத்துள்ளதாகவும், அதனை சுட்டிக்காட்டும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் முக்கிய பதிவு செய்தார்.
சூப்பர் அண்ணன்.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 9, 2026
இதை காங்கிரஸ்கார்கள் சொன்ன ஐடி விங் மேதைகள் எங்களை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர். . https://t.co/H6a17kzNNe
மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவை சுட்டிக்காட்டி முக்கிய பதிவு செய்துள்ளார். இதுபற்றி மாணிக்கம் தாகூர், ‛‛சூப்பர் அண்ணன். இதை காங்கிரஸ்காரர்கள் சொன்னால் ஐடி விங் மேதைகள் எங்களை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்கப்படாமல் இருப்பதை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட பல மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்தனர். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ளது.
இந்நிலையில் தான் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் உள்பட பலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் விஜயின் தவெக கூட்டணியில் சேர சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்காத விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சனம் செய்தனர்.
இதனால் தமிழகத்தில் தவெக கூட்டணியில் சேர காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இத்தகைய கருத்துகளை கூறி வருவதாக கூறப்பட்டது. அதோடு திமுகவின் ஐடி விங்க் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இதனால் திமுக - காங்கிரஸ் இடையே சமூக வலைதளங்களில் சண்டை நடந்து வுந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினே மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளதால் ‛‛இதை காங்கிரஸ்காரர்கள் சொன்னால் ஐடி விங் மேதைகள் எங்களை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர்'' என்று மணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications