‘ஜனநாயகன்' காத்து வாங்கிய தியேட்டர்.. என்ன உள்ளே ஒருத்தர் கூட இல்லை. தமிழகத்திலேயே இப்படியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முதல் நேற்று 'ஜனநாயகன்' திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் போட்டி போட்டு சென்ற நிலையில் திருத்தணியில் உள்ள தியேட்டரில் போதிய அளவுக்கு ரசிகர்கள் வரவில்லை என்று 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதோடு, இன்னொரு தியேட்டரில் யாருமே இல்லாமல் திட்டமிட்டப்படி ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

jana-nayagan-first-show-canceled-dut-to-not-enough-audience-at-tiruttani-theatre

தமிழக முதல்வராக இருக்கும் தவெக தலைவர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' நேற்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் 'ஜனநாயகன்' திரைப்படத்தை தியேட்டர்களில் பார்த்து கொண்டாடினர்.

அதேபோல், தமிழக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் இன்று தியேட்டர்களுக்கு சென்று திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.

இப்படியான சூழலில் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியட்டரில் போதிய ரசிகர்கள் வராததால் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மற்றொரு திரையரங்கில் யாருமே இல்லாத போதிலும் திட்டமிடப்பட்டப்படி 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்டது.

இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் போட்டி போட்டி கொண்டனர். பல இடங்களில் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. இன்னும் சில திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட் வாங்கி ரசிகர்கள் திரைப்படத்தை ரசித்தனர்.

ஆனால் திருவள்ளூர் மாவட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் இல்லை என்று 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சி ரத்தானதும், இன்னொரு தியேட்டரில் யாருமே இல்லாத நிலையிலும் திரைப்படம் திரையிடப்பட்ட சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+