ஜனநாயகன் விவகாரம்.. பாஜகவின் புதிய ஆயுதம் சென்சார் போர்டு.. விஜய்க்காக குரல் கொடுத்த ஸ்டாலின்!
சென்னை: சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வரிசையில் பாஜகவின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்க இழுத்தப்படும் சூழலில், சென்சார் போர்டுக்கு ஸ்டாலின் கண்டனம் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ் சினிமாவில் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் ரிலீஸாக இருந்தது. ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் கடைசி வரை கிடைக்கவில்லை. ஜனவரி 9ஆம் தேதியான இன்று ஜனநாயகன் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

டிசம்பர் 18ஆம் தேதியே தணிக்கை வாரியத்திடம் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கப்பட்ட போதும், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. நீதிமன்ற படிகள் ஏறிய போதும், ஜனநாயகன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய முடியாமல், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கடைசி நிமிடத்தில்தான் கிடைத்துள்ளது.
இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பராசக்திக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட போது, 25 இடங்களில் காட்சிகள், வசனம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் 52 இடங்களில் வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளது. உச்சமாக முன்னாள் முதல்வர் அண்ணா பேசும் வசனங்கள் 22 நொடிகள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பராசக்தி திரைப்படம் முழு ஆன்மாவுடன் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் சென்சார் போர்டின் செயல்பாடுகள் குறித்த விவாதம் நடந்து வருகிறது. ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய பாஜக அரசு தடுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனநாயகன் மற்றும் பராசக்தி படங்களுக்கு ஆதரவாக சென்சார் போர்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வரிசையில் பாஜகவின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டது. கடுமையான கண்டனங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் சென்சார் போர்டு மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
-
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications