திருட்டு சைட்டை பாராட்டும் விஜய் ரசிகர்கள்.. "ஜனநாயகன்" லீக் விவகாரத்தில் இதை யாருமே எதிர்பார்க்கல
சென்னை: தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்த விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், இணையத்தில் லீக் ஆகி பெரும் சூறாவளியில் சிக்கியுள்ளது. விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் இந்தப் படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்திருப்பது ஒட்டுமொத்தத் திரையுலகையும், அவரது த.வெ.க தொண்டர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் பிரபல பைரசி தளம் வெளியிட்ட ஒரு அறிவிப்பும் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்!
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். அரசியலுக்கு வந்துள்ள விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. வரும் ஜனவரி 9ம் தேதியே பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டிய இந்தப் படம், கடந்த நான்கு மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

ஜனநாயகன்
சென்சார் போர்ட் பிரச்சனையில் இது ஏற்கனவே சிக்கித் தவிக்கிறது. விஷயம் நீதிமன்றம் வரை சென்றது. இருப்பினும், அங்குத் தீர்வு கிடைக்காத நிலையில், தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுவிட்டது. அதைத் தொடர்ந்து ரிவைசிங் கமிட்டி இந்த படத்தைப் பார்த்துள்ளது. இதுவரை சென்சார் பிரச்சினை முழுமையாக முடிவடைந்ததா என்பதில் தெளிவு இல்லை.
இணையத்தில் லீக்
இந்தச் சூழலில் தான் நேற்றிரவு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஜனநாயகன் நேற்று இணையத்தில் லீக் ஆனது. முதலில் ஓபனிங் சண்டைக் காட்சி, கிளைமேக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகள் வெளியான நிலையில், பிறகு ஒட்டுமொத்த படமும் லீக் ஆனதாகச் சொல்லப்படுகிறது. அது கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்ட போதிலும், இணையத்தில் அந்த காட்சிகள் டிரெண்டாகி வருகிறது. மேலும், முழு படத்தையும் கூட பலரும் டவுன்லோட் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஜனநாயகன் இதுபோல ரிலீஸ் ஆனது திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்கள்
மேலும், படம் கசிந்த செய்தி வெளியானவுடன், விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். "தயவுசெய்து யாரும் லீக் ஆன வீடியோக்களைப் பார்க்காதீர்கள்.. தியேட்டரில் மட்டுமே பார்ப்போம்" எனச் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் கூட லீக் ஆன லிங்குகளை நீக்கப் பெரும் போராட்டமே நடத்தி வருகிறது.
இந்த சூழலில் தான் எப்போதும் படங்களைத் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ்எம்வி என்ற இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவர்களும் ஜனநாயகனை லீக் செய்து கல்லா கட்டுவார்கள் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒறு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். அதாவது ஜனநாயகன் ரிலீஸுக்கு பிறகே அவர்கள் லீக் செய்வார்களாம். அதுவரை வெளியிட மாட்டார்களாம்.
வெளியிட்ட விளக்கம்
இது தொடர்பாக அவர்கள் மேலும், "குறிப்பிட்ட நடிகரைச் சுற்றி நடக்கும் அரசியல் சிக்கல்கள் குறித்து நாங்கள் அறிவோம். எங்கள் கொள்கைப்படி, திரைப்படம் தியேட்டர்களில் வெளியான பிறகுதான் நாங்கள் அதைப் பதிவேற்றுவோம். எனவே, அதிகாரப்பூர்வமாகப் படம் ரிலீஸ் ஆகும் முன்பு 'ஜனநாயகன்' படம் இங்கே பதிவேற்றப்படாது" என்று அறிக்கை கொடுத்துள்ளார்.
திருட்டுத்தனமாகப் படம் ரிலீஸ் செய்யும் ஒரு தளமே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்ப்பதாகவே இருக்கிறது. இந்த ஜனநாயகன் பரபரப்பிற்கு மத்தியில் தமிழ் எம்பி தளத்தின் போஸ்ட்டும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு நன்றியும் கூடச் சொல்லி வருகிறார்கள்.
-
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
பெரிய மீனை இறக்கிய விஜய்.. லட்டு மாதிரி திமுகவிற்கு சாதகமான முடிவு.. ஸ்டன் ஆகி நின்ற தவெக! -
விஜய்யின் ‘ஆபரேஷன் 12’.. நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? தவெக-வின் ரகசிய மூவ்! -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி -
சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள்












Click it and Unblock the Notifications