Jananayagan: ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்கவில்லை! பிப் 6-ல் ரிலீஸ்! பரவும் தவறான தகவல்!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையில்லை என சொல்லப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சென்சார் அது போன்று சான்று கொடுக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது தள்ளி போய்விட்டது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம், திரைப்படக் குழுவிடம் தெரிவித்தது.
புண்படுத்தும் காட்சி
அதிலும் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள், இந்திய ராணுவம் குறித்த காட்சிகளை நீக்க உத்தரவிட்டிருந்தது. இந்த காட்சிகள் நீக்கப்பட்டு மறு ஆய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியத்தின் தலைவர் அனுப்பினார். ஆனால் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ரிலீஸ் தேதி
அதாவது ரிலீஸ் தேதிக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ கொடுக்குமாறு உத்தரவிடக் கோரியது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, U/A சான்றிதழை வழங்க உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி விநியோக உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் படம் தாமதமாவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
மேல்முறையீட்டு மனு
இந்த நிலையில் இந்த மேல் முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு ஜன.27இல் வெளியாகும் என சொல்லப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை 10.30 மணிக்கு இரு நீதிபதிகள் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வழங்குகிறது. ஆனால் இந்த தீர்ப்புக்கு முன்னரே நேற்று இரவு முதல் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகவும் படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகிறது என்றும் கூறப்படுகிறது.
உண்மை இல்லை
ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்கிறார். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், வழக்கு நிலுவையில் இருக்கும் போது சென்சார் போர்டு, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்கியிருக்காது, அந்த தகவல் தவறு. மேலும் ஜனநாயகன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அதை கோர்ட்டில் தெரிவித்துவிட்டு, தீர்ப்புக்கு முன்னர் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.
6 ஆம் தேதி ரிலீஸ் அதிகாரப்பூர்வம் இல்லை
இல்லாவிட்டால் தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டதாக நீதிபதிகளின் கோபத்திற்கு CBFC உள்ளாகக் கூடும். எனவே ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் வழங்கவில்லை. பிப்ரவரி 6ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்படவில்லை என்றனர்.
இந்த கோர்ட் கேஸ் என தயாரிப்பு நிறுவனத்தை அலைக்கழிக்க வைத்ததே விஜய் என்கிறார்கள். ஜனவரி 9ஆம் தேதி வெளியாகியிருந்தால் ஜனநாயகன், பராசக்தியுடன் போட்டியிட்டு வசூல் ரீதியாக பின்தங்கினால் அது தனக்குஅசிங்கமாக இருக்கும் என்பதால் தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி கோர்ட்டுக்கு விஜய் போக சொன்னதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications