விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்கு போன ஜனநாயகன் பட தயாரிப்பாளர்.. இதை நோட் பண்ணீங்களா
சென்னை: விஜய் பெரும்பான்மை இருப்பதாக 3 வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தெரிவித்தார். அப்போது அவருடன் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணனும் உடன் சென்றது கவனம் பெற்றுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளிடம் ஆதரவு கேட்டது தவெக.

இதில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கொடுத்த்து. காங்கிரசிடம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதையடுத்து விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார். ஆனால் நேற்று மாலை வரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு முறை ஆட்சி அமைக்க உரிமை கோரியும் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் இன்று திடீர் திருப்பமாக விஜய்க்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்தன. விசிகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் ஆதரவு கொடுத்ததாக தகவல் வெளியாகின. இதையடுத்து இன்று மாலை விஜய் ஆளுநரை மூன்றாவது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறினார்.
அப்போது விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோருடன் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர்களோடு ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணனும் உடன் சென்றது கவனம் பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தை தயாரித்தவர் வெங்கட் நாராயணன் ஆவார்.
விஜய்யின் தவெகவினர் ஆளுநரை சந்திக்க சென்ற நிலையில், கட்சியில் இல்லாத ஒருவர் ஆளுநர் அர்லேகருடன் சென்றது ஏன் என அரசியல் விமர்சகர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications