ஜூன் 19-இல் ஜனநாயகன்? விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ரிலீஸ் தேதி உறுதியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி வெளியாகும் என 'District' செயலியில் வந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் 19 ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

முதல்வர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்த வெளியீட்டுத் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பொங்கலுக்கு வர இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தாமதம் மற்றும் ஆன்லைன் கசிவால் பெரும் சிக்கலைச் சந்தித்தது.

Jana Nayagan Release on June 19 Trending Buzz After District App Update

ஜூன் 19-இல் ஜனநாயகன்?

விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு திரைப்படம் விரைவில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இப்போது வரையிலும் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமலேயே இருந்தது. குறிப்பாக திரைப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்று வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. எனினும் விஜய்யின் ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படம் ரிலீசை எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் தான் டிஸ்ட்ரிக்ட் செயலியில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று படம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. அதாவது 'District' செயலியில் இந்த தகவல் வெளிவந்ததால் படம் வெளியாவது உறுதி தான் என சிலர் கூறி வந்தனர். இப்படியாக சமூக வலைத்தளங்களில் ஜனநாயகன் திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற இந்த தகவல் டிரெண்டிங் ஆனது.

விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம்

ஜூன் 19 ஜனநாயகன் திரைப்படம் வெளியீடும், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாளும் இருப்பதால் இத்தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. எனினும் தற்போது உலாவரும் இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.

'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா நேற்று திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து அவர் அளித்த பேட்டியில், "படம் தணிக்கைச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறது. விரைவில் சென்சார் சான்றிதழ் பெற்று, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 'ஜனநாயகன்' படத்தை வெளியிடுவோம்" என்று தெரிவித்தார். சென்சார் சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டதா என்றால் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.

சென்சார் சான்று

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்தது. ஆனால் படத்தில் ராணுவம் சார்ந்த காட்சிகள் மற்றும் சில சர்சையான காட்சிகள் இருப்பதாக கூறி சென்சார் சான்று வழங்கப்படவில்லை. இது தொடர்பாக படக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் வழக்கு விசாரணை தொடர்ந்து நீண்டதால் படக்குழு வாபஸ் வாங்கியது.

தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தினை அனுப்பியது. படம் தொடர்ந்து தணிக்கை குழுவிடம் உள்ள நிலையில் தற்போது வரை சென்சார் சான்று வழங்கப்படவில்லை. இடையில் சில காட்சிகளை நீக்க கோரியதாகவும், படக்குழு தரப்பில் அது நீக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக தளபதி விஜய் என்ற அறிமுகத்திற்கு பதில் முதல்வர் விஜய் என மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+