ஜனநாயகன் vs பராசக்தி.. இப்படித்தான் சென்சாருக்காக பேசியிருப்பாங்க.. மீம்ஸ்
சென்னை: சிவகார்த்திகேயன் , ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்த பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் முதலில் கிடைக்கவில்லை.. மறு தணிக்கையில் பராசக்தி படத்திற்கு கிடைத்தது.. ஆனால் நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது. அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந் தேதி பரிந்துரை செய்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சென்றதால் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதை மையப்படுத்தி மீம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சுதா சிவகார்த்தியேன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்த இந்தி எதிர்ப்பு படமான பராசக்தி ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் விடுமுறையை குறிவைத்து படத்தை வெளியிட இரு திரைப்படங்களும் வெளியாக இருந்தது. படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்தில் இரு தயாரிப்பு நிறுவனங்களுமே விண்ணப்பித்து இருந்தார்கள்.. இதில் பராசக்தி, ஜனநாயகன் இரண்டுக்குமே சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் தரவில்லை.. இரு படத்தையும் மறுதணிக்கைக்கு அனுப்பி உத்தரவிட்டது தணிக்கை வாரியம்.
இதில் பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பியது. 52 இடங்களில் வெட்டி இருந்தது. அதைஏற்றுக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் அதன்படியே காட்சிகளை நீக்கியது. இதனால் யுஏ சான்றிதழை தணிக்கை வாரியம் நேற்று வழங்கியது.
அதேநேரம் கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நேற்று காலை தீர்ப்பு அளித்தார். அப்போது, 'ஜனநாயகன்' படத்தை கடந்த டிசம்பர் 22-ந்தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் என்றும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி, யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனர்.
அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறுஆய்வு செய்யவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது. அந்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், டிசம்பர் 22-ந்தேதி 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைக்க தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஆகவே 'ஜனநாயகன்' படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதாவது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றார்.இதையடுத்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். வழக்கையும் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் ஜனநாயகன் ரிலீஸ் ஆவது 10 நாளைக்கு மேல் தள்ளிப்போயிருக்கிறது.
Sync.. 😂😂 pic.twitter.com/IDQ7GjNlfy
— தமிழ் பொழுதுபோக்கு (@vaangasirikalam) January 10, 2026
ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய இரு படங்கள், இரு படங்களுமே தணிக்கைக்கு போய் நிராகரிக்கப்பட்டு, மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது.மத்திய அரசு மற்றும் இந்திக்கு எதிரான பராசக்திக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டது. ஆனால் பகவந்த் கேசரியின் ரீமேக் எனப்படும் ஜனநாயகனுக்கு சான்றிதழ் கிடைக்காததை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இதில் பராசக்தி ஹீரோவும், ஜனநாயகன் ஹீரோவும் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்று கூறி மீம்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications