ஜனநாயகன் பார்த்துட்டே விஜய் போட்ட உத்தரவு.. வியப்பில் உறைந்த அரசு அதிகாரிகள்.. தியேட்டரிலேயே அதிரடி
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை மூத்த விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ளார். அத்துடன் முதலமைச்சர் விஜய் அரசு அதிகாரிகளிடம் சொன்ன கருத்துகள் குறித்தும் வலைப்பேச்சு விரிவாக பேசியுள்ளார். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
valaipechu anthanan சேனலில் ஜனநாயகன் படத்தை பற்றி மூத்த சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் சிலாகித்து பேசியிருக்கிறார்.. அப்போது அவர் சொல்லும்போது, "ஜனநாயகன் படத்தில் டைரக்டர் எச். வினோத் விஜய்யை மிகச் சிறப்பாகக் காண்பித்துள்ளார். குறிப்பாக, அதில் அரசியல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படம் மட்டும் தேர்தலுக்கு முன்பே வெளியாகியிருந்தால் இன்னும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கக்கூடும்.

ஜனநாயகன் - திமுக எதிர்ப்பு
படத்தில் திமுகவுக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும் சில காட்சிகள் திமுகவினருக்கு எச்.வினோத் மீது பெரிய கோபத்தை ஏற்படுத்தும். ஏனெனில், அவர் அனைவருக்கும் இணக்கமான ஒரு இயக்குநராகவே அறியப்பட்டிருந்தார்.
முதல் நாள் மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்த படத்தை பார்த்தார். ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் அவரோடு உட்கார்ந்து இந்த படத்தை பார்த்தனர்.
முதலமைச்சர் அதிகாரியிடம் சொன்னது என்ன
அப்போது முதலமைச்சர், படத்தில் வரும் போலீஸ் ஆபீசர் கேரக்டரை சுட்டிக்காட்டி, "பெண்கள் பாதுகாப்பு மிக முக்கியம். பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் எப்பொழுதும் முன்னிற்க வேண்டும்.. அதில் எந்தவிதமான சமரசமும் இருக்கக் கூடாது. அதற்காகவே நான் இப்படி ஒரு படத்தை எடுத்தேன்" என்று அதிகாரிகளுடன் ஷேர் செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல ஜனநாயகன் படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் ரூ. 90 கோடி முதல் ரூ. 110 கோடி வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய வசூலாகும். இந்த ஆண்டில் "கருப்பு" படம் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் மாஸ் மற்றும் ரசிகர் பலத்தினால் 'ஜனநாயகன்' படம் நிச்சயம் கருப்பு படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்கள் வடித்த கண்ணீர்
ஆனால், இந்த படத்தை பார்த்த சில அமைச்சர்கள் கண்ணீர் சிந்தியது சோஷியல் மீடியாவில் பெரிய வைரலாகி விட்டது.. அவர்கள் உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டு அழுதார்களா? உள்ளன்போடு கண்ணீர் விட்டார்களா என்பது தெரியவில்லை. அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
ஏனெனில் அரசியலில் முதலமைச்சரின் மனதில் இடம்பெறுவதே பிரதான இலக்காக இருக்கும். இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினால் அவரது மனதில் இன்னும் அழுத்தமாக இடம் பிடித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்த அழுகை தேவைதானா? என்ற கேள்வியும் எழுகிறது..
பொய்யான அழுகை வேண்டாம்
"இதுவே எனது கடைசி படம்" என்று விஜய் அறிவித்துவிட்டதால், இனி இப்படிப்பட்ட நடிகரை திரையில் பார்க்க முடியாதே என்ற மனபாரத்தில் அழுவதாக காரணம் சொல்கிறார்கள்.
ஆனால், இறைவன் இப்படி அழுதவர்களுக்கு அதைவிடப் பெரிய வாய்ப்பை வழங்கியிருக்கிறான். விஜய்யின் அருகிலேயே உட்கார்ந்து இவர்களால் உங்களால் துறை ரீதியாக பேச முடிகிறது. இவர்கள் பேசாவிட்டாலும் 2 நாட்களுக்கு ஒருமுறை விஜய்யே போனில் அழைத்து, லஞ்சத்திற்கு இடம் தராமல் கவனமாகச் செயல்படுமாறு அறிவுறுத்துகிறார். அதனால் இவர்கள் அழ வேண்டிய அவசியமே இல்லை.
அதேசமயம் யாவது பொய்யாக கண்ணீர் வடித்தால், கண்டிப்பாக விஜய் மனதில் இடம்பெற முடியாது. ஏனெனில் சினிமா உலகின் பல போலித்தனத்தை விஜய் நன்றாகவே அறிந்திருக்கிறார்.. ஜெயலலிதா அன்று சிறை சென்றபோது கதறி கதறி அழுத அமைச்சர்கள், அவர் மறைந்த பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஒருத்தர்கூட அழவில்லை. அதனால், இதுபோன்ற போலித்தனங்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
