Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினியைப் போல் மிக்சர் தின்னும் விஜய்! ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழே வரல! விளாசிய ப்ளூசட்டை மாறன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சென்சார் சான்றிதழை கிடைக்காத நிலையில் படத்தின் டிக்கெட் விற்கப்பட்டு வருவதாகவும், இதனை விஜய் கண்டுகொள்ளாமல் ரஜினியை போல மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார் பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூசட்டை மாறன்.

அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜய், கடைசித் திரைப்படமாக அறிவித்துள்ள படம் தான் 'ஜனநாயகன்'. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

Jana nayagan Blue Sattai Maran Vijay

கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் உடன், பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைக்க படத்தின் 4 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனநாயகன் படம்

இந்நிலையில் படம் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்காத நிலையில், அதனை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவது சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. தற்போது படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நிலையில் தான் படத்துக்கு மேலும் ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. படத்துக்கான சிறப்புக் காட்சிக்கும் தமிழக அரசு இன்னும் அனுமதி தரவில்லை. அப்படியே தந்தாலும் ஒன்பது மணி காட்சிக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

சென்சார் சான்றிதழ் பிரச்சனை

இந்த நிலையில் படத்தின் சென்சார் சான்றிதழே கிடைக்காத நிலையில் படத்தின் டிக்கெட் விற்கப்பட்டு வருவதாகவும், இதனை விஜய் கண்டுகொள்ளாமல் ரஜினியை போல மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார் பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூசட்டை மாறன். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திருநெல்வேலி ராம் முத்துராம் தியேட்டரில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் மன்ற சிறப்புக்காட்சி டிக்கெட்கள் தரப்பட்டுள்ளன. இப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் தரவில்லை. சிறப்புக்காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு இன்னும் தரவில்லை.

ப்ளூசட்டை மாறன் விமர்சனம்

இந்த டிக்கெட்களின் ரேட் என்னவென்று குறிப்பிடவில்லை. சென்சார் சான்று மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான தமிழக அயசாணை‌ வருவதற்குள் டிக்கெட்கள் தர வேண்டிய அவரசம் ஏன்? சென்சார் மற்றும் தமிழக அரசை இப்படியான தியேட்டர்கள் மதிப்பதில்லையா? இதுபோல எத்தனை தியேட்டர்கள் ஜனநாயகன் டிக்கெட்களை முன்பே விநியோகம் செய்துள்ளன? தனது படம் சார்ந்த இப்படியான விஷயங்களை கேள்விகளை கேட்காமல் பல வருடமாக.. ரஜினி பாணியில் மிக்சர் சாப்பிடும் விஜய்... ஊழலை ஒழித்து முதல்வர் ஆகப்போகிறாராம்.

ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனை

அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை தந்து டிக்கெட் வாங்கும் அணில்கள்.. தளபதியின் சிப்பாய்களாம். இதை திமுக அரசு கேள்வி கேட்காதா? விஜய் மற்றும் அவரது கட்சியினரை தற்குறிகள் என நக்கலடிக்கும் உடன்பிறப்புகள் வாய் திறப்பார்களா அல்லது அவர்களும் ரசிகர் மன்ற டிக்கட் வாங்கி.. தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு FDFS பார்த்து மகிழ்வார்களா?" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+