ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் ஜனநாயகன் படத்தில் அரசியல் தொடர்பான வசனங்கள் இருப்பதால் அந்த படத்தை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு மறு தணிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசிப் படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக மத்திய தணிக்கை வாரியம் மறுஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டது.
மத்திய தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து படக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. முதலில் தனி நீதிபதி படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் செய்த மேல்முறையீட்டில் தலைமை நீதிபதி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து, நேரடியாகத் தணிக்கை வாரியத்தையே அணுக முடிவெடுத்த படக்குழு, உயர் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற மனு செய்ததால், அது தள்ளுபடி ஆனது.
இதற்கிடையில், 'ஜனநாயகன்' படத்தை மார்ச் 9-ஆம் தேதி மறு ஆய்வுக் குழு பார்க்கவிருந்தது. ஆனால், உறுப்பினர் உடல்நலக்குறைவால் அது ரத்தானது. பின்னர், மார்ச் 17-ஆம் தேதி மறு ஆய்வுக் குழுவினர் படத்தை முழுமையாகக் கண்டனர்.
தற்போது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் குறித்து மறு ஆய்வுக் குழு பரிசீலித்தது. இதனால், திரைப்படத்தைத் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலுக்குப் பின்னரே தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. விஜய்க்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுவதாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை தேர்தல் முடிந்தவுடன் படம் ரிலீஸாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’












Click it and Unblock the Notifications