"தளபதி கச்சேரி" எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. அட இந்த மலையாள பாட்டுதான்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" ரிலீஸாக டிரெண்டாகி வரும் நிலையில், அந்தப் பாடல் ஆவேஷம் படத்தில் இடம்பெற்ற "இலுமினாட்டி" பாடலின் காப்பி என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இரு பாடல்களின் பீட்ஸ், இசை மற்றும் டியூனும் ஒத்துப் போவதால் விஜய் மற்றும் அனிருத் தரப்பில் பலரும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். அ.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி டியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், 2ஆம் பாதியில் அரசியல்வாதியாகவும் வருவதாக கூறப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று ரிலீஸாகி இருக்கிறது. அனிருத் இசையில் விஜய், அனிருத் மற்றும் அறிவு ஆகிய மூவரும் சேர்ந்து "தளபதி கச்சேரி" பாடலை பாடியுள்ளனர்.
இந்தப் பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி இருக்கிறது. கலர்ஃபுல்லாக பாடல் உருவாக்கப்பட்டுள்ளதோடு, விஜய்யின் துள்ளலான நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் கொஞ்சம் அரசியலையும் தொட்டு சென்றுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் என்று இரு தரப்புக்குமான பாடலாம அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் தளபதி கச்சேரி பாடலை ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படத்தின் "இலுமினாட்டி" பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. துள்ளலான இசையுடன், ஃபகத் ஃபாசிலின் ஜாலியான நடனம் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது வெளியாகியுள்ள தளபதி "கச்சேரி பாடல்" அப்படியே "இலுமினாட்டி" பாடலை போலவே இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அந்தப் பாடலின் பீட்ஸ், டியூன் மற்றும் பின்னணி இசை எல்லாமே அப்படியே ஒத்துப் போகிறது. தளபதி கச்சேரி பாடலில் அவை கொஞ்சம் 2x வேகத்தில் இருக்கின்றன. அதுமட்டுமே வித்தியாசம். அதேபோல் இரு பாடல்களிலும் நாயகர்கள் வெள்ளை சட்டையை அணிந்திருக்கின்றனர்.
அட வெங்கட்கெட்டவைங்களா இதுக்காடா இவ்வளவு பில்ட்டப் 😂
— இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima) November 8, 2025
அதுக்கு கேரளாக்காரன் மூத்திரத்தை வாங்கி குடிக்கலாம்லடா 😂@ramk8060 @LoyolaMani@Jana_Naayagan#JanaNayagan
pic.twitter.com/FLbWTjTxN7
வழக்கமாக விஜய் பாடல் தான் மற்ற மாநில சினிமாக்களில் டிரெண்டாக அமையும். ஆனால் விஜய்யின் கடைசி படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் முதல் பாடலே காப்பியாக இருப்பது விஜய் ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன் படமும் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பொங்கல் பந்தயத்தில் ஜனநாயகன் பந்தயம் அடிக்குமா என்பதும் சந்தேகம் என்று விஜய் ரசிகர்களும் கூட சோகத்துடன் கூறி வருகின்றனர்.
-
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications