Jananayagan: அடி மேல் அடி! விஜய்யை துரத்தும் பிரச்சனை! ஜனநாயகன் ரிலீஸாகும் தியேட்டர்களில் ரெய்டு?
சென்னை: ஜனநாயகன் படம் ரிலீசாகும் போது அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்தால் தியேட்டர்களுக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தியேட்டர்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரெய்டு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து படக்குழு வாபஸ் பெற்றது. இதை ஏற்று நீதிபதி பி.டி. ஆஷா வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் 'ஜனநாயகன்' மறுதணிக்கை செய்யப்பட்டு, விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க, கேவிஎன் ப்ரோடெக்ஷன்ஸ் தயாரித்தது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம், தணிக்கைச் சிக்கலால் குறித்த நாளில் வெளியாகவில்லை. இதையடுத்து படம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
தனி நீதிபதி ஆஷா, 'ஜனநாயகன்' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, உரிய அவகாசம் வழங்காததைக் குறிப்பிட்டு, வழக்கை மீண்டும் அவர் விசாரிக்க உத்தரவிட்டனர்.
தாமதத்தால், மறுதணிக்கைக்கு படத்தை அனுப்ப ஒப்புக் கொண்ட தயாரிப்பு நிறுவனம், வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தது. இது தொடர்பாக பதிவுத்துறையில் கடிதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி பி.டி. ஆஷா தள்ளுபடி செய்தார்.
வழக்கு தள்ளுபடியானதால், 'ஜனநாயகன்' மறுதணிக்கைக்குச் செல்ல உள்ளது. 20 நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு இந்த மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் பட்சத்தில் ரெய்டு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை எந்த தியேட்டரிலாவது அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டால் சீல் வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி படம் ரிலீஸாக இருந்த போது ஒரு டிக்கெட் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. அது போல் விஜய், எந்த கட்சியையாவது ஊழல் கட்சி என்றால் அவரை விமர்சிக்கும் அரசியல்வாதிகள், "100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு பெயர் என்ன?" என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தற்போது தியேட்டர்களில் ரெய்டு நடத்தி அதிக விலைக்கு விற்பனையாவது கண்டறிந்தால் தியேட்டருக்கு சீல் வைக்கப்படும். இதனால் ஜனநாயகன் வசூல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஜனவரி 9ஆம் தேதி படம் ரிலீஸாகாததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் படம் ரிலீஸாகியும் நஷ்டம் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என தியேட்டர் உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.
-
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான்












Click it and Unblock the Notifications