ஜனநாயகன் லீக்! படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ்.. படத்தொகுப்பாளருக்கான சங்கத்திலிருந்து அதிரடி நீக்கம்!
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜனநாயகன் திரைப்படம், திரைக்கு வருவதில் பெரிய சிக்கலை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் முழு படமும் லீக் ஆகியிருந்தது. இந்த விவகாரத்தில், தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திலிருந்து, ஜனநாயகன் திரைப்பட தொகுப்பாளர் பிரதீப் ராகவ் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
படம் லீக் ஆன விஷயம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு சிலரை கைதும் செய்திருந்தது. இப்படி இருக்கையில் தற்போது திரைப்பட தொகுப்பாளர் பிரதீப் ராகவ், சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ் தென்னிந்திய திரைபடத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும் 'ஜனநாயகன்" திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் E. ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால் திரைப்பட துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைபடத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது.
திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி முன்னிலையில் படத்தொகுப்பாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு பிரதீப் E ராகவ் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் "இடை நீக்கம்" செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.
இந்த இடை நீக்க காலத்தில் சங்கம் பிரதீப் E. ராகவ் எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications