Jananayagan release: ஜனநாயகன் ஏப்ரல் 30க்குள் ரிலீஸ் இல்லை! அப்போ ஜூன் மாதம் வெளியாகிறதா?
சென்னை: 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் வெளியிடப்படாது என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ஜூன் மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. கண்டிப்பாக வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொங்கல் பண்டிகைக்கு (ஜனவரி 9) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், அரசியல் கலந்த கதையம்சம் கொண்டது. விஜய் ஒரு மக்கள் தலைவராக நடித்துள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சென்சார் போர்டில் சில காட்சிகள் தொடர்பான சர்ச்சை எழுந்தது. தணிக்கை வாரியம் 'யூ/ஏ' சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது, இதனால் உயர்நீதிமன்றம் வரை வழக்கு சென்றது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவான வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றுவிட்டது. மேலும் ஜனநாயகன் படத்தை மறு தணிக்கை குழுவுக்கும் அனுப்பியுள்ளது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கனடாவில் படத்தை விநியோகிக்கும் யார்க் சினிமாஸ் நிறுவனம், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "ஏப்ரல் 30-க்கு முன்பு 'ஜனநாயகன்' வெளியாகாது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும். தியேட்டர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்" என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. "இது அரசியல் சதி! திமுக-பாஜக சேர்ந்து தடுக்கிறார்கள்" என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரசியல் மற்றும் சமூக நீதி குறித்த கதை என்பதால், விஜயின் அரசியல் பிரவேசத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. தயாரிப்பாளர் சிவா மற்றும் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், ஆனால் சென்சார் வழக்கு மறு தணிக்கைக்கு சென்றுள்ளது.
ரசிகர்கள் "ஜனநாயகன்" ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து, விரைவில் வெளியிடக் கோரி வருகின்றனர். இந்த தாமதம் படத்தின் வசூல் மற்றும் விஜயின் அரசியல் இமேஜை பாதிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற சென்சார் சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுகின்றன, ஆனால் 'ஜனநாயகன்' போன்ற பெரிய படங்களுக்கு இது பெரும் சவால். விரைவில் நல்ல செய்தி வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம்












Click it and Unblock the Notifications