Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 10 நிமிடம்.. எல்லாம் போச்சு.. விஜயின் ஜனநாயகன் பட வழக்கு தோற்றது எப்படி? கோர்ட்டில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் தர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்த நிலையில் அதை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. படத்தின் வழக்கு மீண்டும் தனி நீதிபதியிடம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் விஜய் தரப்பிற்கு என்னவெல்லாம் எதிராக சென்றது என்று பார்க்கலாம்.

ஜனநாயகன் வழக்கு மீண்டும் தனி நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்படும். ஆனால் இந்த முறை CBFC வாதங்களும் கேட்கப்படும். எல்லோரின் வாதங்களும் கேட்ட பின்பே வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Jananayagan movie Verdicts What went wrong and against Vijay in the case

அந்த 10 நிமிடம்

முன்னதாக விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்யப்பட்டது. சரியாக 10 நிமிடத்தில் தீர்ப்பு வந்த உடன் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில்தான் தற்போது ஜனநாயகன் தரப்பிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. 2 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. படத்திற்கு எதிராக CBFC உறுப்பினர் எழுதிய கடிதம் ஒன்றே இந்த படம் சிக்கலுக்கு உள்ளாவதற்கு காரணம். 5 உறுப்பினர்களில் 1 நபர் படம் தவறாக இருப்பதாக கூறியதால் அதன் சான்றிதழ் நிறுத்திவைக்கப்ட்டது.

ஜனநாயகன் வழக்கில் என்ன நடந்தது?

ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளை சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே படத்தை எதிர்க்கு முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது.

முன்னதாக 'அமரன்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, படப்பிடிப்பு முடிந்ததும் பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான காரணத்தை விளக்கி, தணிக்கை வாரியத்திற்குச் சமர்ப்பிக்கும் முன்பே தடையில்லா சான்றிதழைப் பெற்றனர்.

'அமரன்' குழு ஒருபடி மேலே சென்று, வெளியீட்டிற்கு முன்பே ராணுவ அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினருக்குச் சிறப்புத் திரையிடல்களை நடத்தியது. பின்னூட்டங்களைப் பெற்று, ஆட்சேபணைகளையோ அல்லது தவறான புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இல்லை என்பதை உறுதிசெய்தனர்.

இத்தகைய முன்னுதாரணங்கள் இருந்தும், 'ஜனநாயகன்' குழு இதே அணுகுமுறையைப் பின்பற்றாதது ஆச்சரியமளிக்கிறது. ஜனநாயகன் குழு இந்த படத்தில் ராணுவ சின்னங்களை பயன்படுத்த NOC வாங்கவில்லை. அதுவே படம் இப்போது சிக்கலவாதற்கும் காரணமாக அமைந்துவிட்டது.

ஜனநாயகன் படத்தின் தணிக்கை பிரச்சனை ஆவாதற்கு, படத்தில் உள்ள மத ரீதியிலான கருத்துக்களே காரணம் என்று கூறப்படுகிறது. படத்தில் வில்லன் போடும் கெட்ட திட்டத்திற்கு o - m என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதுவே படம் வெளியாவதில் சிக்கலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அதாவது o - m என்பது OM என்பதை குறிப்பிடுவது போல இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் முக்கியமான மத சொல், மந்திர சொல்லான OM என்பதை வில்லன் போடும் திட்டத்திற்கு வைத்துள்ளது. ஜனநாயகன் படத்தின் டிரைலரில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதான் படத்திற்கு தணிக்கை கிடைக்க சிக்கல் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வாரியம் பரிந்துரைத்த சிறிய மாற்றங்களுக்கும் படக்குழு சம்மதித்தபோதிலும், சான்றிதழ் இன்னும் நிலுவையில் உள்ளது.

வைக்கப்பட்ட வாதங்கள் : ஜனநாயகன்

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முன்வைத்த வாதங்களில் ஜனவரி 5-ம் தேதி தயாரிப்பாளர் மனுத் தாக்கல் செய்தபோதே, படத்தை 'மறுஆய்வுக் குழுவுக்கு' (Revising Committee) அனுப்பத் தணிக்கை வாரியத் தலைவர் முடிவெடுத்தது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பு அந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. மாறாக படத்திற்கு சான்றிதழ் வழங்க கேட்டிருந்தனர். ஏற்கனவே நாங்கள் 'மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை அவர்கள் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தனி நீதிபதி முன் நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்தார். தயாரிப்பாளர் தரப்பு 'U/A 16+' சான்றிதழ் வழங்க மட்டுமே கோரியிருந்த நிலையில், வாரியத் தலைவரின் உத்தரவைத் தனி நீதிபதி ரத்து செய்தது சரியல்ல. தயாரிப்பாளர் தரப்பு அதை கோரிக்கையாக வைக்கவில்லை.

மேலும் தணிக்கை வாரியத்தின் மண்டல அதிகாரி டிசம்பர் 22-ல் அனுப்பிய கடிதம், 'ஆய்வுக் குழுவின்' (Examining Committee) பரிந்துரை மட்டுமே. அதில் 14 காட்சிகளை நீக்கினால் 'U/A 16+' சான்றிதழ் வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இது தணிக்கை விதிகளின்படி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல, ஒரு இடைக்காலத் தகவல் மட்டுமே.

டிசம்பர் 29-ம் தேதி, டெல்லியில் உள்ள தணிக்கை வாரியத் தலைமையகம், ஜனநாயகம் படத்திற்கு எதிராகப் புகார் வந்துள்ளதால், சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்குமாறு மண்டல அதிகாரியைப் பணித்தது. இது ஜனவரி 5-ல் தயாரிப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டது.

72 நிமிடங்களுக்கு மேல் ஓடும் படங்களுக்குத் தணிக்கை வாரியத் தலைவரே இறுதி முடிவெடுக்க அதிகாரம் கொண்டவர். இந்தப் படத்தின் விஷயத்தில், வாரியத் தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று வாதம் வைத்தார்.

நீதிபதிகளின் கேள்விகள்:

டிசம்பர் 22-ம் தேதி கடிதத்தை அனுப்பியது யார்? அது தணிக்கை வாரியத்தின் முடிவா அல்லது ஒரு ஆலோசனைக் குழுவின் முடிவா? என நீதிபதிகள் வினவினர்.

ஜனநாயகன் படத்தை யார் பார்த்தது மண்டல அதிகாரி படத்தைப் பார்த்தாரா? எனத் தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு ASG "இல்லை, ஆய்வுக் குழு மட்டுமே பார்த்தது" எனப் பதிலளித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், "அப்படியென்றால் ஆய்வுக் குழுவை முழு வாரியமாகக் கருத முடியாது; அது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே" எனக் குறிப்பிட்டனர்.

ஒருவேளை தனி நீதிபதி இந்த வழக்கை இன்னும் விரிவாக விசாரித்திருந்தால், வாரியம் நேரடியாகப் படத்தைப் பார்த்ததா அல்லது ஆய்வுக் குழு போன்ற ஒரு அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பின் மூலம் பார்த்ததா என்ற சட்ட நுணுக்கம் தெளிவாகியிருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மும்பை அல்லது டெல்லியில் இருக்கும் வாரிய உறுப்பினர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் படங்களையும் பார்ப்பது சாத்தியமில்லை. அதனால்தான் ஆய்வுக் குழுக்கள் மற்றும் மறுஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+