இந்திய வரலாற்றில் முதல்முறை! ஜனநாயகன் டிக்கெட் கட்டணத்தை refund செய்ததில் சாதனை! இத்தனை லட்சமா?
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் நாளை ரிலீஸாகாததால் அதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான தொகையை தியேட்டர் உரிமையாளர்கள் திருப்பி கொடுத்து வரும் நிலையில் இந்திய வரலாற்றிலேயே டிக்கெட் ரீபண்ஃட்டில் அதிக அளவு திருப்பி கொடுப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. கடந்த மாதம் படம் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படங்களில் சில மாற்றங்களை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

அந்த மாற்றங்களை செய்து டிசம்பர் 18ஆம் தேதி மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. தணிக்கை சான்று கிடைப்பதற்கு முன்னதாகவே சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
அதிகபட்சமாக ஒரு டிக்கெட் 7000 ரூபாய் வரை விற்பனையானதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் நாளை ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ 4.50 லட்சம்
இதனால் ரசிகர்கள் பெற்ற டிக்கெட்டை திருப்பி தர வேண்டிய கட்டாயத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆளாகினர். அந்த வகையில் ரூ 4.50 லட்சம் வரை டிக்கெட் முன்பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. இதன் மூலம் அதிக அளவு டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுத்ததிலும் ஜனநாயகன் சாதனை படைத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர்கள் யார் யார்
ஜனநாயகன் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 2 நிமிடம் 52 வினாடிகள் வெளியான டிரெய்லர் விஜய்யின் பேசும் அரசியல் வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. அரசியல்வாதிகளை சாட்டையால் அடிப்பது, பஞ்ச் வசனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
விஜய்க்கு எந்த ரோல்
மேலும் விஜய் ஒரு சிறை கைதியாக இருந்தவர் போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. தனது மகளை யாரோ கொல்ல வருகிறார்கள், அவரிடம் இருந்து அவரை காப்பாற்ற போராடுகிறார் விஜய். அது போல் தாய் நாட்டையும் காப்பதில் விஜய் பெரும் பங்கு வகிக்கிறார்.
இந்த திரைப்படம் தெலுங்கு படமான பகவந்த் கேசரி எனும் தெலுங்கு படத்தின் ரீமேக் எண சொல்லப்பட்டது. ஆனால் டிரெய்லரை பார்த்தாலே அந்த படம் என்று தெரிவதாக பலர் கூறியுள்ளனர்.
சென்சார் கிடைக்கலை
இந்த படம் நாளை ரிலீஸாவதாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்கு தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குகிறோம் என தணிக்கை குழு தெரிவித்தது.
ஆனால் இதை ஏற்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. மேலும் யு சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. அப்போது தணிக்கை குழு , "இந்த படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் அமைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்க முடியாது" என தெரிவித்தனர்.
டிக்கெட் முன்பதிவு
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் வழக்குப் பதிவு செய்த நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. சென்னை ரோகிணி தியேட்டர், நெல்லை ராம் தியேட்டர் உள்ளிட்ட தியேட்டர்களில் ரசிகர்களுக்கு டிக்கெட் முன்பதிவு நடந்தது.
டிக்கெட் முன்பதிவு கட்டணம்
ஆனால் எதிர்பாராதவிதமாக தணிக்கை சான்று கிடைக்காததால் நாளை ஜனநாயகன் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியை பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை தியேட்டர் நிர்வாகம் திருப்பி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 4.50 லட்சம் ரூபாயை தியேட்டர் ஓனர்கள் திருப்பி கொடுத்துள்ளனர்.
இது வரலாற்று சாதனை என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவிற்கு அதிக கூட்டம் கூடியதற்காக சாதனை படைத்த நிலையில் தற்போது டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுப்பதிலும் சாதனை படைத்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications