"ஜனநாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்" - சபாநாயகர் JCD பிரபாகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜனநாயகன் படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும். ஜனநாயகன் படத்திற்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை" என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பிரஸ் மீட்டில் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ்நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது ஜனநாயகன் திரைப்படம். முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ஜனநாயகன் படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

JCD Prabhakar

ஜனநாயகன் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் திரையரங்குகளில் கண்டு ரசித்து வருகின்றனர். தவெக அமைச்சர்கள் பெரும்பாலானோரும் ஜனநாயகன் திரைப்படத்தை முதல் நாளே கண்டு ரசித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் விரும்பும் மாற்றங்களை செய்ய, விரல் நுனியில் விவரங்களோடு, முதல்வர் முனைப்புடன் தயாராக இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மாணவர்களின் போராட்டத்தை 'ஜனநாயகன்' பட ரிலீஸ் மழுங்கடித்துவிட்டதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சூடாக பதிலளித்த ஜேசிடி பிரபாகர், "ஜனநாயகன் படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ரிலீஸ் ஆகியுள்ளது. 'ஜனநாயகன்' படத்துக்கும், மாணவர்களின் போராட்டத்துக்கும் சம்பந்தமும் இல்லை. 'ஜனநாயகன்' படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர, மாணவர்கள் அல்லது மற்றவர்களின் மூளையை, மூளைச் சலவை செய்யும் படம் இல்லை.

வார்த்தைகளின் மூலமாக நாம் செல்கிற பாதையை திசைதிருப்புகிற முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருக்கிறேன். இப்போது வந்திருப்பது தொழில் துறை சம்பந்தமானது. அதை விட்டுவிட்டு வேறு விஷயங்கள் பற்றி கேட்பது சங்கடமானது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஜேசிடி பிரபாகர், "தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியில் ஏற்கனவே தொழில்துறைக்கு பல அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை செயல்படுத்த முதல் விஜய் தலைமையிலான அரசு தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+