ஒரே நாளில் ஆன்லைனில் ரூ.258 கோடிக்கு ஆர்டர் செய்த பெண்.. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் புகழ்பெற்ற அனிமே மற்றும் மாங்கா சீரிஸ் கதாபாத்திரங்களின் பொருட்களை ஆன்லைனில் ஆயிரக்கணக்கில் ஆர்டர் செய்து, பின்னர் அவற்றை தொடர்ந்து ரத்து செய்து நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்திய 32 வயது பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த மாயு யோஷிதா என்ற பெண், புகழ்பெற்ற பதிப்பக நிறுவனமான ஷூயேஷா நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஒன் பீஸ் உள்ளிட்ட பல பிரபல அனிமே தொடர்களின் பொருட்களை ஆர்டர் செய்து.. பின்னர் அதை வாங்காமல் டெலிவரிக்கு முன் கேன்சல் செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் ரத்து செய்த பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 4.3 பில்லியன் யென், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.258 கோடி ஆகும்.

Japanese Woman ordered cancelled Rs 258 Crore Manga Merch to Relieve Stress

2000க்கும் மேற்பட்ட போலி ஆர்டர்கள்

ஜப்பானிய செய்தி நிறுவனமான எஃப்என்என் பிரைம் ஆன்லைன் தகவலின்படி, மாயு யோஷிதா பொருட்களை வாங்கும் நோக்கமோ அல்லது பணத்தைச் செலுத்தும் எண்ணமோ இல்லாமல் 2,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களைச் செய்துள்ளார். இதற்காக அவர் சுமார் 238 போலி மற்றும் வெவ்வேறான கணக்குகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆர்டர்களை ரத்து செய்ய கையாண்ட விசித்திர வழிகள்

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், யோஷிதா இந்த ஆர்டர்களை ரத்து செய்ய பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார்:

கன்வீனியன்ஸ் ஸ்டோர் கட்டணம்

ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது கடைகளில் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைச் செலுத்தாமல் விட்டுவிடுவார். இதன் மூலம் மட்டுமே பல பில்லியன் யென் மதிப்பிலான பொருட்கள் ரத்து செய்யப்பட்டன.

பொருளைப் பெற மறுத்தல்

கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துவிட்டு, பார்சல்கள் வீட்டிற்கு வரும்போது அவற்றை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வாறு 2,100-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போலி முகவரிகள்

சில நேரங்களில் பொருட்களை டெலிவரி செய்ய முடியாத வகையில் போலியான முகவரிகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பொருட்களை ஆர்டர் செய்து ரத்து செய்ததால், அவற்றை அனுப்பியதற்கான டெலிவரி செலவு மற்றும் பிற நிர்வாகச் செலவுகள் காரணமாக ஷூயேஷா நிறுவனத்திற்கு சுமார் 7.5 மில்லியன் யென் .. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.45 லட்சம் நேரடியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மன அழுத்தம் குறைந்தது: அதிர்ச்சி அளித்த வாக்குமூலம்

காவல்துறையினரின் விசாரணையில் மாயு யோஷிதா அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனக்கு அனிமே கதாபாத்திரங்கள் மீது மிகுந்த விருப்பம் இருந்ததாகவும், ஆன்லைனில் அப்பொருட்களைப் பார்ப்பது பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

எனது அன்றாட வாழ்க்கையில் கடுமையான மன அழுத்தம் இருந்தது. பிரபல அனிமே பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்வதற்குமுன்பாக, நான் அவற்றை வெற்றிகரமாக ஆர்டர் செய்யும்போது எனக்குள் ஒரு திருப்தியும் மன அமைதியும் கிடைத்தது. ஆர்டர் செய்து முடித்ததும் மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சியாக உணர்ந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஷூயேஷா நிறுவனத்தின் மீது தனக்கு எந்தவித தனிப்பட்ட வஞ்சமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 ஆண்டுகளாக தொடர்ந்த மோசடி

யோஷிதா சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் தான் ஆர்டர் செய்த பொருட்களைப் பணம் கொடுத்து சரியாகப் பெற்றுள்ளார். ஆனால், அக்டோபர் 2023 முதல் இந்த போலி ஆர்டர் மற்றும் ரத்து செய்யும் நடைமுறையைத் தொடங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவந்துள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுக்க நிறுவனம் கோரிக்கை

ஷூயேஷா நிறுவனத்தின் ஜம்ப் கேரக்டர்ஸ் ஸ்டோர் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. யோஷிதாவின் இந்தச் செயலால், உண்மையான அனிமே ரசிகர்களுக்குப் பொருட்கள் சென்று சேர்வதில் நீண்ட காலமாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மோசடி மூலம் வணிகத்திற்குத் தடை ஏற்படுத்திய குற்றத்திற்காக யோஷிதாவைக் கைது செய்த காவல்துறையிடம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஷூயேஷா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட யோஷிதா தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+