Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக மீனவர்கள் மீது மோடிக்கு கொஞ்சம் கூட அக்கறையில்லை! ராமேஸ்வரம் வரும் நேரத்தில் ஜவாஹிருல்லா சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்கள் மீது பிரதமர் மோடிக்கு கொஞ்சம் கூட அக்கறையில்லை என அவர் ராமேஸ்வரம் வரும் நேரம் பார்த்து குற்றஞ்சாட்டியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்னர் கூட மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ஜவாஹிருல்லா இது குறித்து கூறியிருப்பதாவது;

Jawahirullah accused Prime Minister Modi of not caring about the fishermen of Tamil Nadu

''புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த பத்து மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த 18 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களது படகுகளும் மீன் பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 504 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ''

''தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களும் மீனவர் பிரதிநிதிகளும் பிரதமர் அவர்களுக்கு பலமுறை கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துவதே இல்லை. தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாக ஆகிவிட்டது. ''

''ஒன்றிய அரசின் வெளியுறவு கொள்கை முழுக்க தோல்வி அடைந்து விட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. மீனவர்களின் படகுகளையும் சிறையில் இருப்பவர்களை மீட்கவும் ஒன்றிய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+