முஸ்லீம் எம்.பிக்களுக்கே பாதுகாப்பு இல்லை.. பாஜக நாடி நரம்பு பூரா வெறுப்பு.. ஜவாஜிருல்லா கொதிப்பு!
சென்னை: நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான் -3 குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி தீவிரவாதி என விமர்சித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரமேஷ் பிதூரியின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதால் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிக அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம் எம்.பி மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது உமிழப்பட்டுள்ள வெறுப்புரையாகும்.
ரமேஷ் பிதுரியின் வெறுப்புப் பேச்சு பாஜகவினரின் நாடி நரம்புகளில் இணைந்திருக்கும் முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை இந்த பேச்சு எடுத்து காட்டியுள்ளது. பிதுரியின் உரை ஆச்சரியத்தைத் தரவில்லை. வி டி சாவர்க்கரைப் பின்பற்றுபவர்களின்மனநிலை இப்படியே இருக்கும் என்பதற்கு இந்த உரை மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜக எம்.பி மீது இது வரை பாஜக தலைமையோ மக்களவை சபாநாயகரோ நடவடிக்கை எடுக்காததும் ஆச்சரியத்தைத் தரவில்லை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி உள்ளிட்டோர் மீது பாய்ந்த நடவடிக்கை ரமேஷ் பிதூரி மீது ஏன் பாயவில்லை?
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் பாஜகவினர் இனி எவ்வாறு தரம் தாழ்ந்து நடப்பார்கள் என்பதற்கு இது தொடக்கப்புள்ளியோ என்று எண்ண வேண்டியுள்ளது. ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் மேலும் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications