சர்க்காருக்கு சல்யூட்.. சைலண்டாய் கொக்கி போட்ட ஜெயா டிவி! டிடிவி சொன்னது விஜயை தானா? அதகள அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கார் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து ஜெயா டிவியில் பதிவு இடப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்து எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு வாழ்த்து சொல்வது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சசிகலா டிடிவி தினகரனுடன், விஜய் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு இருப்பதை மறைமுகமாகவே இந்த பதிவு உணர்த்துவதாக சொல்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் நடித்து வெளியான படம் சர்க்கார். இந்த படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதாரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Vijay TTV Dhinakaran tvk

அரசியல் படமான இந்த படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை விமர்சிப்பது போலவும், அரசின் இலவசங்களை எதிர்ப்பது போலவும் படத்தில் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது.

ஜெயா டிவி சர்க்கார்

படம் வெளிவந்த பொழுதில் அதிமுகவினர் இந்த படத்தை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜெயா டிவி '7 இயர்ஸ் ஆப் சர்க்கார்' என புகைப்படம் வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் கமெண்ட் செக்ஷனில் எடப்பாடி அதிமுகவை எதிர்த்து விஜயை ஜெயா டிவி வாழ்த்துகிறதா? டிடிவி தினகரன், சசிகலாவுடன் விஜய் கூட்டணி வைப்பாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிடிவி தினகரன்

காரணம் உண்மையில் சர்க்கார் படத்துக்கும் ஜெயா டிவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ் என்பதும், ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை அந்த நிறுவனத்திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே 2026 தேர்தலை கருத்தில் கொண்டு தான் சர்க்கார் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளது என்கின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக இருந்த ஜெயா டிவி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. விவேக் ஜெயராமன் தான் அந்த தொலைக்காட்சியை நிர்வாகம் செய்து வருகிறார்.

டிடிவி தினகரன் கூட்டணி

இந்த நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஜெயா டிவி பதிவிட்டுள்ளது தான் தற்போது அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதன் பின்னணியில் விஜய் தலைமையை ஏற்க டிடிவி தினகரன் தயாராக இருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிர்ச்சி தலைவர்கள் ஒவ்வொருவரையும் அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் வரிசையில் அதிமுக சீனியரான செங்கோட்டையனும் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

விஜய் அரசியல்

ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமியின் வருகைக்குப் பிறகு அந்த கூட்டணியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த தன்னை வெளியேறும் நிலைக்கு தள்ளியதால் எடப்பாடி மீதும், பாஜக மீதும் கடும் அதிருப்தியில் இருக்கும் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் எனவும், தங்களை தவிர்த்து விட்டு யாரும் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது எனக்குள் இருந்தார். திமுகவுடன் எந்த காலத்தில் கூட்டணி கிடையாது என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் மற்றும் விஜயை குறிப்பிட்டு தான் அவர் பேசி இருக்கிறார் என்கின்றனர். மேலும் அதிமுக வென்று விடக்கூடாது என்பதற்காக விஜய் உடன் டிடிவி தினகரன் கைகோர்க்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+