ஆச, தோச, அப்பளம், வடை... திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் நிலை இதுதான் - ஜெயக்குமார் சுளீர்!
சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியானது ஆச, தோச, அப்பள வடை போன்ற ஏமாற்று வேலைதான் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சி.பா ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலையில் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது: தமிழகத்தில் தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருவதில் இருந்தே தெரிகிறது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது!

அமைதி தவழும் மாநிலம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் இருந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் 50% நிறைவேற்றியதா?. சிறு குழந்தைகளின் ஆசை தோசை, அப்பள, வடை விளையாட்டு போல தான் அவர்களின் கருத்து உள்ளது. 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத என்பதை பட்டியலிட முடியுமா?

திமுக குறுக்கு வழியில்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர். மக்கள் பிரச்சனைகளை எங்களுடையே வாசலுக்கே வந்து தெரிவிக்கலாம் என கூறினர். ஆனால் இன்று புகார் தெரிவிக்க வருபவர்கள் தீக்குளிக்கும் நிலையிலேயே உள்ளது. இதுதான் திமுக ஆட்சியின் ஆட்சியின் அவல நிலை என்றும் கூறினார்.

525 வாக்குறுதிகள்
திமுக தனது தேர்தல் அறிக்கையில் 525 வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுதான் அதிமுகவின் குற்றச்சாட்டாகும். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பிரச்சார கூட்டங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக வாக்குறுதிகள் நிறைவேற்றாதது குறித்து விமர்சித்து வருகிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
இவரது விமர்சனத்திற்கு நேற்றைய தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கடந்த 4 மாதங்களில் திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் 220 வாக்குறுதிகளை எவ்வாறெல்லாம் நிறைவேற்றியுள்ளோம் என்பதை முதல்வர் ஸ்டாலினே விளக்கியுள்ளார். எந்தெந்த வாக்குறுதிகள் எந்த வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொன்ன வாக்குறுதிகளில் எவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்பது குறித்தெல்லாம் முதல்வரே விளக்கியும் அதிமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications