ஜெயக்குமாருக்கு ஒரே பால் நியாபகம்.. அண்ணாமலையின் தொழிலே “பொய்” சொல்வதுதான் - அமைச்சர் நாசர் ஆவேசம்
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை நாளொரு வண்ணம் பொழுதுறு மேனியுமாக பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சித்து உள்ளார்.
சென்னை ஆவடியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்து இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதன்முறையாக ஆவடி முதல் தூத்துக்குடி 170A ஆவடி முதல் திருநெல்வேலி 180A என்ற புதிய வழித்தட எண் பேருந்து இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு இரண்டு வழித்தட எண் பேருந்துகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதிய பேருந்து
பின்னர் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சரியான நேரத்தில் பேருந்தை இயக்க கைக்கடிகாரம் வழங்கிய அவர், பேருந்தில் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். அத்துடன் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கிய அமைச்சர் நாசர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜெயக்குமார்
அப்போது பால் குடிக்கும் பூனை என அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் நாசர், "பால் குடித்து, குடித்து பழக்கியவர் பால் நினைப்பாகவே இருப்பவர் அவர், அப்படி தான் மற்றவர்களையும் நினைத்துக்கொள்வார் என விமர்சித்தார்.

அண்ணாமலை
தொடர்ந்து பேசிய அவர், "தன்னை முன்நிலைப்படுத்திக்கொள்ள அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் zero ஆக இருக்கக்கூடிய தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆவினில் சத்து மாவு விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உண்மை. ஆனால் அதை வெளியில் வாங்கி விற்பனை செய்வதாக பொய் புகாரை கூறும் அண்ணாமலை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளார்.
Recommended Video

ஆவின் குடிநீர்
விரைவில் ஆவடியிலிருந்து திருப்பதிக்கு நேரடியாக பேருந்து வசதி தொடங்கப்படும் என கூறிய அவர், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் ஆவடியில் விரைவு பேருந்து சேவை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆவின் குடிநீர் அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் மையம் மூலம் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications