அதிமுக - தவெக கூட்டணி இணையுமா? 24 மணி நேரத்தில் கூட அரசியல் மாறுமாம்.. ஜெயக்குமார் சொல்லும் கணக்கு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறிய ஜெயக்குமார், திமுக கூட்டணியில் இருந்து கூட சில கட்சிகள் விலகக் கூடும் என்று கூறி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். கொங்கு மற்றும் டெல்டா பகுதிகளில் முதற்கட்டமாக மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கிறார்.

தற்போது இன்னும் 8 மாதங்களில் சிறப்பான கூட்டணியை அதிமுக அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். தற்போதைய சூழலில் பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறது. அதில் பாமக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி இணையும் முடிவில் இருக்கிறது.
ஆனால் அதிமுகவோ தொடர்ச்சியாக தவெகவை கூட்டணியில் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுகவுடன் தவெக இணையும் பட்சத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற முடியும். ஆனால் தவெக தங்களின் தலைமையில் மட்டுமே கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் தீவிரமாக உள்ளது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அப்படியான மகத்தான வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் அப்படியானது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் அசத்தலான சாதனைகளை படைத்தோம்.
அதேபோல் திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியும், வெறுப்பும் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, காவல்துறையினரே கொலை செய்யப்படுவது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அப்படியான பிரச்சனைகள் இருந்ததே இல்லை. இதனால் அதிமுக இமாலய வெற்றியை பெறும்.
தொடர்ந்து, அரசியலில் 24 மணி நேரங்களில் மாற்றம் நடந்துள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் போது காட்சிகள் மாறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட விலகக் கூடும். அதனால் தமிழக அரசியலில் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications