திமுக பாஜகவோடு ரகசிய பேச்சு நடத்தி வருகிறது.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பற்ற வைத்த ஜெயக்குமார்!
சென்னை: திமுக பாஜகவோடு ரகசிய பேச்சு நடத்தி வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து அதிமுகவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தர்மயுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ், அதிமுக உறுப்பினர் என்று கூறிக்கொண்டு அதிமுக கரை வேட்டியை கட்டவோ, அதிமுக சின்னம் கொண்ட லெட்டர் பேடுகளை உபயோகிக்கவோ முடியாது.
இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ் அதிமுக என்று சொல்ல முடியாது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எந்த வகையிலாவது குழப்பத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என வக்கிர புத்தியோடு பல்வேறு முறை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு 'குட்டு' வாங்கிய ஓபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் கொடுத்தது மரண அடி." என்றார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், "ரோம் நகர் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் இருக்கிறார் ரோபோ மன்னன் ஸ்டாலின். சட்டம், ஒழுங்கை சீரழித்துவிட்டு தமிழ்நாடு உரிமை மீட்பு மாநாடு நடத்துவதா? திமுகதான் பாஜகவோடு ரகசிய பேச்சு நடத்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. அதிமுக, பாஜகவோடு ரகசியமாக கூட்டணியை தொடர்வதாக திமுக விமர்சித்து வருகிறது. அதேசமயம், பிரதமர் மோடி உடன் நெருங்கி வரும் திமுக, ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவின் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications