சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா இறந்ததற்கு "அது" காரணமல்ல.. அப்பல்லோ மருத்துவர்கள் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா மரணத்திற்கு அது காரணமல்ல என மருத்துவர்கள் விளக்கம்- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதால் இறந்தார் என்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் குற்றச்சாட்டை அப்பல்லோ மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

    ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

    நல்ல வேகம்.. பெரிய வெளிச்சம்.. 2 பறக்கும் தட்டுகளை பார்த்தோம்.. விமானிகள் பரபர வாக்குமூலம்! நல்ல வேகம்.. பெரிய வெளிச்சம்.. 2 பறக்கும் தட்டுகளை பார்த்தோம்.. விமானிகள் பரபர வாக்குமூலம்!

    பகீர் தகவல்

    பகீர் தகவல்

    அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்ததால் தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகீர் தகவலை கொடுத்தார்.

    அக்கறை இல்லை

    அக்கறை இல்லை

    அதாவது சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு எந்த உணவை கொடுக்கக் கூடாதோ அந்த உணவையே சசிகலா குடும்பத்தினர் கொடுத்தனர். ஜெயலலிதாவுக்கு இருந்த சர்க்கரை நோய் குறித்து சசிகலாவுக்கு எந்த அக்கறையும் இல்லை.

    வேலைக்கு ஆகவில்லை

    வேலைக்கு ஆகவில்லை

    இதனால் அவருக்கு ஒவ்வாத உணவு பொருட்களை கொடுத்ததன் விளைவு ஜெயலலிதாவை இழந்து நிற்கிறோம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அவரது தினசரி பணிகளை சசிகலா கவனித்து கொண்டார். இதை தவறாக பயன்படுத்திய தினகரனும் அதிமுக நிர்வாகிகளை மிரட்டத் தொடங்கினார். எனினும் இந்த வியூகங்கள் தற்போது வேலைக்கு ஆகவில்லை என்றார்.

    மறுப்பு

    மறுப்பு

    அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த இரு மூத்த மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி அமைச்சர் கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    English summary
    The doctors at Apollo Hospital have confirmed that the former Tamil Nadu chief minister did not die of ‘slow poison’. They also refuted the Tamilnadu Minister Dindigul Srinivasan's statement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X