ஜெயலலிதா பிறந்தநாள்! கேக் வாங்கியது ஒருவர்; சாப்பாடு போட்டது ஒருவர்; யார் யார் என்னென்ன ஸ்பான்சர்?
ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர் செய்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர்.
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர்கள் ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள்.
75 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாங்கிக் கொடுத்த நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரான வளர்மதி, தொண்டர்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிறார்.
இதேபோல் மற்றொரு முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜெயலலிதா பிறந்தநாள்
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்' சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த சிறப்பு மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை, அதிமுக அவைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன் பெற்றுக்கொண்டார். அதே போல், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கலைப்புனிதன் தயார் செய்த "புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி ஒரு பார்வை" என்ற நூலினை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ராட்சத கேக்
அதைத் தொடர்ந்து தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டின் பேரில் தயார் செய்யப்பட்டிருந்த 75 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கினை வெட்டிய எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தனது கையால் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மருத்துவ முகாம்
இதேபோல் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமையும் எடப்பாடி பழனிசமி துவக்கி வைத்தார். அந்த முகாமில், பொது மருத்துவம், ECG, BP, சர்க்கரையின் அளவு கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

சாப்பாடு போட்டு
அவைகளை தொடர்ந்து அதிமுக மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் நிகழ்ச்சியையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதிமுக தொண்டர்களுக்கு கேசரி, பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் பல வகை உணவுகள் வழங்கப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications