4ம் தேதி இறந்த ஜெயலலிதா.. 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்ட அப்பல்லோ.. ட்ரெண்ட்டாகும் மருத்துவமனை அறிக்கை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 4 ஆம் தேதி இறந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் கூறிய நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வைரலாகி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஜெயலலிதா இறந்த தேதியிலேயே பெரும் முரண்பாடு இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 4
அதாவது ஜெயலலிதா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு இறந்துவிட்டார் என்றும் அந்த அறிவிப்பை தாமதப்படுத்த இறந்த உடலுக்கு சிபிஆர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் அவருக்கு முதலாமாண்டு திதியை டிசம்பர் 4 ஆம் தேதி கொடுத்தார் என ஆணையம் பஞ்சாங்கத்துடன் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 5, 2016
இந்த நிலையில் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்ற அப்பல்லோவின் அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. இந்த அறிக்கை அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. அந்த அறிக்கையில், தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்கிறோம்.

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்
ஜெயலலிதா காய்ச்சல், நீர்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு தொடர்ந்து பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

மருத்துவ நிபுணர் குழு
அங்கே எங்கள் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் டிசம்பர் 4, 2016 இல் துரதிருஷ்டவசமாக முதல்வருக்கு இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால் முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது.அவருடைய உயிரை காப்பாற்ற முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டன.

இரவு வந்த அறிக்கை
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.16) இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். அப்பல்லோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும் மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக் கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு தமிழக முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும் தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications