மெரூன் கலர் பெட்டி.. ஜெ. ஸ்டிக்கர்... காலில் செருப்பு புது அடிஷன்.. ஓபிஎஸ்-சின் அசத்தல் என்ட்ரி
ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட் சூட்கேசுடன் ஓ.பி.எஸ். நுழைந்தார்.
Recommended Video

சென்னை: பட்ஜெட் பெட்டியில் வழக்கம் போல அம்மா ஸ்டிக்கர் சகிதம் இந்த வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
காலங்காலமாக பட்ஜெட் தாக்கல் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் இப்போது இருப்பது போலவெல்லாம் அப்போது இல்லை.
பாதுகாப்பான முறையில் அதேசமயம் அமைதியாக பெட்டியில் அறிக்கையை கொண்டு வந்து வைத்து வாசிக்கும்போதுதான் தமிழக மக்கள் அனைவரும் ரேடியோவில் பட்ஜெட் பற்றின விவரங்களை காதை தீட்டி வைத்து கொண்டு கேட்பார்கள். மறுநாள் நாளிதழ்களில் தங்கள் தொகுதிக்கு ஏதாவது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை கூர்ந்து படிப்பார்கள்.

பிள்ளையார் சுழி
ஆனால் இன்றோ, பட்ஜெட் பெட்டியை எடுத்து வருவதே ஒரு பரபரப்பாகி விட்டது. இதற்கு பிள்ளையார்சுழி போட்டு வைத்தது ஓ.பன்னீர்செல்வமேதான். பட்ஜெட் சூட்கேசில் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்ட ஆரம்பித்தது இவர்தான்.

கலர் கலர் பெட்டி
ஜெயலலிதாவுக்கு பச்சை கலர், மெரூன் கலர் என சென்ட்டிமென்ட்டாக கலர்கள் மாறும். அதற்கேற்றவாறு பட்ஜெட் பெட்டியும் பச்சை கலர், புளூ கலர் என இதுவரை வந்திருக்கிறது. இப்போது மெரூன் கலரில் ஜெ.ஸ்டிக்கர் சிரித்தபடி உள்ளது.

ஜெ.ஸ்டிக்கர்
2015-16-பட்ஜெட்டின்போது மட்டும் ரொம்ப ரொம்ப அமைதியாக, எந்த விளம்பரமும் இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏனென்றால் ஜெயலலிதா அப்போது சிறையில் இருந்தார். பிறகு விடுதலையானவுடன் இடைக்கால பட்ஜெட் வந்தவுடன், திரும்பவும் பெட்டியில் ஜெ.ஸ்டிக்கர்தான்.

செருப்பு இல்லை
இன்னொரு விஷயம் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் கவனிக்க ஆரம்பித்ததே ஜெயலலிதாவிடம் அவர் காட்டிய பணிவும் மரியாதையும்தான். எப்போதெல்லாம் பட்ஜெட் தாக்கல் செய்கிறாரோ அப்போதெல்லாம் காலில் செருப்புக்கூட போடாமல் வரும் அளவுக்கு மரியாதை வைத்துள்ளவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.

காலில் செருப்பு
இதுவரை பட்ஜெட் தாக்கலின்போது அவர் காலில் செருப்பு போடாமலேயே வந்ததை எத்தனை பேர் கவனித்திருப்பார்களோ தெரியாது. ஆனால் இந்த முறை செருப்புடன்தான் ஓ.பன்னீர்செல்வம் வந்திருக்கிறார். ஆனால் முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி விட்டே வந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications