ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான டிவி ஷோ எது தெரியுமா.. அப்பல்லோவிலும் பார்த்த நிகழ்ச்சி
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பொழுதுபோக்காக என்ன செய்தார் என்பது குறித்து சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அக்கா ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஜெய வீர ஹனுமான் சீரியல்களை பார்ப்பார். அதனால் அந்த சீரியல்களையும் அவருக்கு பிடித்த பழைய பாடல்களை பென்டிரைவிலும் டிவிடியிலும் அக்காவின் உதவியாளர் கார்த்திகேயன் மூலமாக கொண்டு வரச் சொல்லி டிவியில் பார்த்து வந்தார்.

ஆன்மீக பாடல்
அவருக்கு விருப்பமான ஆன்மீக பாடல்களையும் காலை மற்றும் மாலையிலும் அக்கா கேட்டு வந்தார். மேலும் கார்த்திகேயன் ஏற்கெனவே என்னிடம் கொடுத்த , அக்காவின் சிசிக்சை தொடர்பாக அஇஅதிமுக நிர்வாகிகள், தமிழக அதிமுக அமைச்சர்கள் (முன்னாள்) மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் பேசிய வீடியோக்களை அக்காவு்கு நான் போட்டு காண்பித்துள்ளேன்.

கட்டில்
4.12.2016 அன்று மாலை 4.20 மணிக்கு கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு கண்ணாடி போட்டுக் கொண்டு ஜய வீர ஹனுமான் சீரியலை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார் என சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவர் அவ்வப்போது திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களுக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

கும்பகோணம் மகாமகம்
அது போல் கும்பகோணம் மகாமகம் போன்ற ஆன்மீக நிகழ்வுகளுக்கும் அவர் சென்றிருந்தார். ஜெயலலிதாவுக்கு பிள்ளையாரையும் மிகவும் பிடிக்கும். அவர் தனது போயஸ் தோட்டத்தின் வீட்டருக்கே ஒரு பிள்ளையார் கோயிலை வைத்து வழிபட்டு வந்தார். போயல் தோட்டத்தை விட்டு வெளியே சென்றாலும் தோட்டத்திற்கு வந்தாலும் அந்த விநாயகரை தரிசனம் செய்வார். அது போல் கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு செல்வதையும் வழக்கமாகவே கொண்டிருந்தார்.

பிள்ளையார் சதுர்த்தி
ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியின் போது போயஸ் தோட்டத்தில் உள்ள விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனைகளை ஜெயலலிதா மேற்கொள்வார். அது போல் அவருக்கு புராண கதைகளிலும் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சநேயரையும் மிகவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை கொண்டதால்தான் அப்பல்லோவில் இருந்த போதும் ஆன்மீக பாடல்கள், ஆன்மீக சீரியல்கள் என அவர் பொழுதுபோக்காக எடுத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications