விஜய்யுடன் வலம் வரும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்.. கட்சியிலும் முக்கிய பதவி! யார் இவர்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஜோதிடர் ஒருவர் நெருக்கமாக இருந்து வருகிறார். அவரை தவெக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராகவும் நியமித்துள்ளார் விஜய். அவர்தான் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்தான ஜோதிடராகத் திகழ்ந்தவர்.
ராதன் பண்டிட் வெற்றிவேல், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் பிறந்தவர். பள்ளி, கல்லூரி காலத்தில் கிரிக்கெட் வீரராக விளங்கியவர். 1989 வாக்கில் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் கணித்துக் கூறினார். அதன்பிறகு, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். பின்னர் 1996ல் ஜெயலலிதா தேர்தலில் தோல்வியடைவார் என்றும், சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கணித்துச் சொன்னவர் ராதன் பண்டிட்.

ஜோதிடர் ராதன் பண்டிட்
ராதன் பண்டிட் கணித்த பெரும்பாலானவையும் அப்படியே நடந்ததால் தனிப்பட்ட ஜோதிடராக அவரிடம் ஆலோசனைகளை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார் ஜெயலலிதா. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் போதும் தேர்தல் சமயங்களிலும், தன்னிடம் ஆலோசனை பெற்றே ஜெயலலிதா பல விஷயங்களில் செயல்பட்டதாக ராதன் பண்டிட் கூறியுள்ளார். ஜெயலலிதா தனக்கு எதிரான பல வழக்குகளில் தனது ஆலோசனையின்படியே செயல்பட்டதாக ராதன் பண்டிட் கூறியுள்ளார்.
தனது ஆலோசனையின்படியே ஜெயலலிதா தமது பெயரின் கடைசியில் கூடுதலாக ஒரு A சேர்த்துக்கொண்டார் என்றும், அதன்பிறகு தான் தொடர்ச்சியாக 2 முறை சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா 2 முறை முதலமைச்சர் ஆனார் என்றும் கூறியுள்ளார் ராதன் பண்டிட்.
ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாமல் சசிகலாவுக்கும் ஆஸ்தான ஜோதிடராகத் திகழ்ந்தவர் ராதன் பண்டிட். என்.சசிகலா என்று இருந்ததை வி.கே.சசிகலா என மாற்றிக்கொண்டதற்குப் பின்னணியிலும் இந்த ராதன் பண்டிட் தான் இருக்கிறாராம். சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமன ஜோதிடராகவும் திகழ்ந்து வந்துள்ளார். சசிகலா குடும்பத்தினரின் தொழில் நிறுவனங்கள், குடும்ப விவகாரங்கள் சார்ந்து ஜோதிட ஆலோசனைகளை கூறி வந்தது இவர்தான் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருக்கு மிகவும் நெருக்கமாகியுள்ளார் ராதன் பண்டிட் வெற்றிவேல். 2026ல் விஜய் முதலமைச்சர் ஆவார் என சில யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தார் ராதன் பண்டிட் வெற்றிவேல். மேலும், விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு தேதியை குறித்துக் கொடுப்பது இவர்தான் என்றும் கூறப்படுகிறது.
தவெகவில் முக்கிய பொறுப்பு
அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தவெக மாநில செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தவெகவில் மாநில செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டது அனைவரது புருவங்களையும் உயரச் செய்தது. அவர் தற்போது விஜய்க்கு ஆஸ்தான ஜோதிடர் ஆகியுள்ளதாகவும், அவரது ஆலோசகளை பல முக்கியமான நேரங்களில் விஜய் கேட்டுச் செயல்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
கொள்கைத் தலைவர் பெரியார்
பெரியாரை கொள்கைத் தலைவர்களில் ஒருவராக ஏற்றுள்ள தவெக தலைவர் விஜய், ஜோதிடர் ஒருவரை அருகிலேயே வைத்துக்கொண்டு அவர் பேச்சைக் கேட்டுச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications